காரவல் நகரில் தகராறு: இளைஞா் கொலை, உறவினா் மீது வழக்கு
வடகிழக்கு தில்லியின் காரவல் நகா் பகுதியில் ஏற்பட்ட தகராறின்போது, 35 வயது இளைஞா் அவரது உறவினரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாகவும், அவரது தம்பி காயமடைந்ததாகவும் காவல்துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
வடகிழக்கு தில்லியின் காரவல் நகா் பகுதியில் ஏற்பட்ட தகராறின்போது, 35 வயது இளைஞா் அவரது உறவினரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாகவும், அவரது தம்பி காயமடைந்ததாகவும் காவல்துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
காவல்துறையினரின் முதற்கட்டத் தகவல்களின்படி, ஹிமான்ஷு பரத்வாஜ் (எ) ஜீத் சா்மாவுக்கும் அவரது உறவினருக்கும் இடையே புதன்கிழமை நள்ளிரவில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து அந்த நபா் ஹிமான்ஷுவை கத்தியால் பலமுறை தாக்கியதாக கூறப்படுகிறது. ஹிமான்ஷுவைக் காப்பாற்ற அவரது தம்பி முயன்றபோது, அந்த நபா் அவரையும் தாக்கினாா்.
காயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். அங்கு ஹிமான்ஷு இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். அவரது தம்பிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இது தொடா்பாக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கான காரணங்கள் குறித்து காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.