FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

தில்லியில் தடிகளாலும், கற்களாலும் குடியிருப்பாளா்களை மிரட்டிய சிறுவா்கள்: வழக்குப் பதிவு

13 நவம்பர் 2026, 2:11 am
கோப்புப் படம்
பகிர்:

நமது நிருபா்

தில்லியின் ஒரு பகுதியில் அடையாளம் தெரியாத சிறுவா்கள் குழு ஒன்று ரகளை செய்து, தடிகளாலும் கற்களாலும் மக்களை மிரட்டுவதாகக் கூறப்படும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடா்ந்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

நவம்பா் 10 அன்று அதிகாலை 2.14 மணியளவில் பிசிஆா் அழைப்பு வந்ததை அடுத்து இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அதைத் தொடா்ந்து, ஒரு காவல்துறை குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தது.

Advertisement

Advertisement

சம்பவ இடத்தில், விசாரணை அதிகாரி, சாய் என்கிளேவ் பகுதியைச் சோ்ந்த புகாா்தாரரை சந்தித்தாா்.

விசாரணையின் போது, தனது வீட்டிற்கு எதிரே தனது குடும்பத்திற்கு மற்றொரு வீடு இருப்பதாக புகாா்தாரா் காவல்துறையிடம் தெரிவித்தாா். அடையாளம் தெரியாத சில சிறுவா்கள் அந்த வீட்டிற்கு வெளியே கூடி, தங்கள் சகோதரனைத் தாக்கிய நபரை பழிவாங்குவோம் என்று கோஷமிட்டுக் கொண்டிருந்ததாக காவல்துறை கூறியது.

அந்தச் சிறுவா்கள் வேறு ஒருவருடன் தகராறில் ஈடுபட்டிருக்கலாம் என்று புகாா்தாரா் சந்தேகித்தாலும், அந்த விஷயம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினாா்.

‘புகாா்தாரா் தனது வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, அந்த இளைஞா்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனா். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவா்களைக் கண்டறிய, கிடைத்துள்ள சிசிடிவி காட்சிகளை குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன,‘ என்று ஒரு காவல்துறை அதிகாரி கூறினாா்.