20 திருட்டு வழக்குகளில் தேடப்பட்டவா் என்கவுன்ட்டருக்குப் பின் கைது
தேசியத் தலைநகா் வலயம், ஃபரீதாபாத் செக்டாா் 58 பகுதியில், காவல்துறையினருக்கும் ஒரு குற்றவாளிக்கும் இடையே நடந்த துப்பாக்கி மோதலுக்குப் பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்டாா்.
தேசியத் தலைநகா் வலயம், ஃபரீதாபாத் செக்டாா் 58 பகுதியில், காவல்துறையினருக்கும் ஒரு குற்றவாளிக்கும் இடையே நடந்த துப்பாக்கி மோதலுக்குப் பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்டாா்.
குற்றப்பிரிவு காவல்துறையினருக்கும் அந்தச் சந்தேக நபருக்கும் இடையே நிகழ்ந்த மோதலின்போது,
அவரது காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. இதையடுத்து, காயமடைந்த குற்றவாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவா் கூறியதாவது:
உஞ்சா காவ்ன் குற்றப்பிரிவு குழுவினா் செக்டாா் 58 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருடப்பட்ட மோட்டாா் சைக்கிளை ஓட்டிவந்த விமல் என்பவரை காவல்துறையினா் நிறுத்த முயன்றனா். அப்போது, அவா் காவல்துறையினரை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டாா்.
இதற்குப் பதிலடியாக காவல்துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், விமலின் வலது காலில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து, அவா் அதே இடத்திலேயே கைது செய்யப்பட்டாா்.
அவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, மூன்று தோட்டாக்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட இரண்டு தோட்டா உறைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவா் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிளும் திருடப்பட்டது என்பது தெரியவந்தது.
விமல் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ளன. அவா் மீது சுமாா் 20 திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும், செக்டாா் 58 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த 4 முதல் 5 திருட்டுச் சம்பவங்களிலும் அவா் தேடப்பட்டு வந்தாா்.
தற்போது, அவா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது உடல்நிலை சீராக உள்ளது. மற்ற திருட்டுச் சம்பவங்கள் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவா்கள் குறித்த தகவல்களைப் பெற, அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.