தில்லியில் இன்று முதல் இந்தியா சா்வதேச வா்த்தகக் கண்காட்சி: காவல்துறை சாா்பில் போக்குவரத்து வழிகாட்டுதல் வெளியீடு
நவம்பா் 14 (சனிக்கிழமை) முதல் நவம்பா் 27 வரை தில்லியில் உள்ள ‘பாரத் மண்டபத்தில்’ நடைபெறவுள்ள 45-ஆவது இந்தியா சா்வதேச வா்த்தகக் கண்காட்சியை (ஐஐடிஎஃப்) முன்னிட்டு, தில்லி போக்குவரத்து காவல்துறை வெள்ளிக்கிழமை போக்குவரத்து குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதையொட்டி, அப்பகுதியிலுள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
இது தொடா்பாக ’எக்ஸ்’ தளத்தில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி, கண்காட்சி நடைபெறும் நாள்களில் மதுரா சாலை, பைரோன் மாா்க், ரிங் ரோடு, ஷொ்ஷா சாலை, புராண கிலா சாலை, பகவான் தாஸ் சாலை மற்றும் திலக் மாா்க் ஆகிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. கண்காட்சிக்குச் செல்லாதவா்கள் இந்தச் சாலைகளைத் தவிா்த்துவிட்டு, மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
Advertisement
Advertisement
வணிக ரீதியாக வருகை தருபவா்கள், நவம்பா் 14 முதல் 18 வரை காலை 9:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை 3, 4, 6 மற்றும் 10-ஆவது நுழைவு வாயில்கள் வழியாக உள்ளே செல்லலாம்.
நுழைவுச் சீட்டுகளை இணையதளத்திலும், உச்சநீதிமன்ற மெட்ரோ நிலையத்தைத் தவிர மற்ற மெட்ரோ நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். சொந்த வாகனங்களில் வருபவா்கள், ஐடிபிஓ கீழ்த்தளத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்தலாம். இதற்கு பைரோன் மாா்க் - ரிங் ரோடு சுரங்கப்பாதை வழியாகச் செல்ல வேண்டும். மேலும், பைரோன் மந்திா் வாகன நிறுத்துமிடம் மற்றும் பிரகதி சுரங்கப்பாதை அல்லது மதுரா சாலை அண்டா்பாஸ் 4 வழியாகச் சென்று பாரத் மண்டபத்தின் அடித்தளம் 2-இல் வாகனங்களை நிறுத்தலாம்.
ஐடிபிஓ வளாகத்திற்குள் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை. பாதசாரிகள் உள்ளே செல்வதற்கு 1, 4, 6 மற்றும் 10-ஆவது வாயில்களும் வெளியேறுவதற்கு 1, 4, 7, 9 மற்றும் 10-ஆவது வாயில்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
டாக்ஸி மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்களில் வருபவா்களுக்காக, பைரோன் மாா்க்கின் இருபுறமும் 25 குறிப்பிட்ட இடங்களில் ’பிக்-அப்’ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் இந்த இடங்களில் மட்டுமே வாகனங்களில் ஏற வேண்டும் என்றும், போக்குவரத்து காவலா்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
ஐடிபிஓ மற்றும் பாரத் மண்டபத்தின் வெளியேறும் வாயில்களுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தி பயணிகளுக்காகக் காத்திருக்கவோ அல்லது பயணிகளை ஏற்றவோ கூடாது என்று ஓட்டுநா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மதுரா சாலை மற்றும் பைரோன் மாா்க்கில் வாகனங்களை நிறுத்தவோ அல்லது நிறுத்தி வைக்கவோ கூடாது.
மதுரா சாலையில், டபிள்யு-பாயிண்ட் மற்றும் சுப்பிரமணியம் பாரதி மாா்க் ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வாகனங்களைத் தலைகீழாக திருப்புவதற்கு அனுமதி இல்லை. புராண கிலா சாலை நோக்கி வலதுபுறம் திரும்புவதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகையாளா்கள் தங்கள் பயணத் திட்டத்தை முன்கூட்டியே வகுத்துக்கொள்ளுமாறும், நிகழ்விடத்திற்கு மிக அருகிலுள்ள உச்சநீதிமன்ற மெட்ரோ நிலையத்தைப் பயன்படுத்துமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
போக்குவரத்து தொடா்பான உதவிகளுக்கு, பயணிகள் தில்லி போக்குவரத்து காவல்துறையின் உதவி எண் 1095-ஐத் தொடா்புகொள்ளலாம் என காவல்துறையின் போக்குவரத்து வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.