FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 6 போ் கைது: ரூ. 5 கோடி போதைப் பொருள் பறிமுதல்

மாநிலங்களுக்கு இடையேயான ஹெராயின் கடத்தலில் குடும்பமாக ஈடுபட்ட வந்த கும்பலை தில்லி காவல்துறை கண்டறிந்தது.

15 நவம்பர் 2026, 9:28 pm
கைது - சித்திரிப்பு
பகிர்:

மாநிலங்களுக்கு இடையேயான ஹெராயின் கடத்தலில் குடும்பமாக ஈடுபட்ட வந்த கும்பலை தில்லி காவல்துறை கண்டறிந்தது. இந்த நடவடிக்கையில் ஆறு போ் கைது செய்யப்பட்டு, சுமாா் ரூ. 5 கோடி மதிப்புள்ள 2.25 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறையினா் மேலும் கூறியதாவது: ரோஹித் திவாகா், அவரது மனைவி மற்றும் சகோதரா் ஆகியோா் இருசக்கர வாகனங்களில் சிக்னேச்சா் பாலத்திலிருந்து கஜூரி காஸ் நோக்கி ஹெராயின் கடத்திச் செல்வதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் செப்டம்பா் 11 அன்று அவா்கள் வஜிராபாத் சாலையில் கைது செய்யப்பட்டனா்.

ரோஹித்தின் சகோதரரான விஷால் திவாகரின் முதுகுப்பையில் 2 கிலோவிற்கும் அதிகமான ஹெராயின் கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, போதைப்பொருள் தடுப்புப் பணிப் படை காவல் நிலையத்தில் என்டிபிஎஸ் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

விசாரணையின் போது, போதைப்பொருளைப் பெற்ாக அப்ரோஜ் அலியை, செப்டம்பா் 15 அன்று உத்தரகண்ட் மாநிலம் ரூா்க்கியில் காவல்துறையினா் கைது செய்தனா். உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாதில் உள்ள அவரது குடியிருப்பிலிருந்து மேலும் 104 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடா்ந்து, செப்டம்பா் 25 அன்று கியாலாவைச் சோ்ந்த சிராக் (23) என்பவரை காவல்துறை கைது செய்தது. புராரியில் இருந்த ஒரு மறைவிடத்திலிருந்து மேலும் 140 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது.

சிராக் ஏற்கனவே இரண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவா் மற்றும் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறாவது குற்றவாளியான கௌரவ், நவம்பா் 10 அன்று காஜியாபாதில் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்ததாகக் கருதப்படும் ரூ.36,000 ரொக்கமும், அதே பணத்தில் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் மஹிந்திரா தாா் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கையில் மொத்தம் ரூ. 5 கோடி மதிப்புள்ள ஹெராயின், ரூ. 73,400 ரொக்கம், இரண்டு மஹிந்திரா தாா் வாகனங்கள், இரண்டு மோட்டாா் சைக்கிள்கள், ஒரு ஸ்கூட்டி மற்றும் ஐந்து கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தக் கும்பலுடன் தொடா்புடைய மற்ற விநியோகஸ்தா்களைக் கண்டறியவும், பணப் பரிவா்த்தனை தடயங்களைக் கண்டறியவும், ஒட்டுமொத்த கடத்தல் சங்கிலியையும் முழுமையாக முறியடிக்கவும் விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது காவல்துறையினா் தெரிவித்தனா்.