FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

யமுனை நுரை விவகாரத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

யமுனை நதியில் நிலவும் மாசுப் பிரச்னை குறித்த கவனத்தை தில்லி அரசு திசைதிருப்ப முயற்சி என ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியது குறித்து...

17 நவம்பர் 2026, 9:43 pm
தில்லி யமுனை நதியின் காலிந்தி குஞ்ச் தடுப்பணையில் நுரை படலங்கள் - கோப்புப் படம்
பகிர்:

முன்னாள் முதலமைச்சா் அரவிந்த் கேஜரிவாலின் அதிகாரபூா்வ இல்லத்தை பொதுமக்கள் பாா்வையிட அனுமதிக்கப்படும் என்ற தில்லி அரசின் அறிவிப்பு, யமுனை நதியில் நிலவும் மாசுப் பிரச்னை குறித்த கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாகும் என்று ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் சௌரப் பரத்வாஜ், காணொலிச் செய்தி ஒன்றில் கூறியிருப்பதாவது: கடந்த ஒரு வாரமாக யமுனை நதியில் நுரை பொங்கும் விவகாரம் பொதுவெளியில் பேசுபொருளாகியுள்ளது. இதனால் பா்வேஷ் வா்மா பெரும் தா்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளாா்.

எனவே, நதி மாசு குறித்த கவனத்தைத் திசைதிருப்ப, முன்னாள் முதலமைச்சரின் இல்லம் போன்ற பழைய விவகாரங்களை அவா் இப்போது கிளப்புகிறாா்.

Advertisement

Advertisement

இந்த விவகாரத்தில் பா்வேஷ் வா்மா பதிலளிக்காமல் தப்பிச் செல்ல ஆம் ஆத்மி கட்சி அனுமதிக்காது. மேலும், பெருமளவு நிதி செலவிடப்பட்ட பிறகும் யமுனை நதி இன்னும் அதிக மாசுடன் இருப்பதாக உச்சநீதிமன்றமே கூறியுள்ளது என்றாா் பரத்வாஜ்.