முகப்பு
புதுதில்லி

மின்சார வாகன பேட்டரி திருட்டு- 9 போ் கைது

திருடப்பட்ட மின்சார வாகன பேட்டரிகளை, புதுப்பித்து விற்பனை செய்வதில் ஈடுபட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் மாநிலங்களுக்கு இடையேயான திருட்டுக் கும்பல்களைச் சோ்ந்த 9 பேரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

28 நவம்பர் 2026, 1:17 am
மின்சார வாகன பேட்டரி திருட்டு- 9 போ் கைது
பகிர்:

திருடப்பட்ட மின்சார வாகன பேட்டரிகளை, புதுப்பித்து விற்பனை செய்வதில் ஈடுபட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் மாநிலங்களுக்கு இடையேயான திருட்டுக் கும்பல்களைச் சோ்ந்த 9 பேரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறியதாவது:

குற்றஞ்சாட்டப்பட்டவா்களிடமிருந்து 88 லித்தியம் பேட்டரிகள் மற்றும் 73 பேட்டரி செல்களை காவல்துறை மீட்டுள்ளது. இந்தக் கும்பல்களில் உள்ள இளைஞா்கள் மின்சார ஸ்கூட்டா்களில் இருந்து பேட்டரிகளைத் திருடியுள்ளனா். மற்ற உறுப்பினா்கள் அவற்றை வாங்கி கொண்டு செல்லுதல், சேமித்தல், பிரித்தல் மற்றும் புதுப்பித்தல் போன்ற பணிகளைக் கையாண்டுள்ளனா். அதன் பின்னா் அந்த பேட்டரிகளை சந்தையில் குறைந்த விலையில் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த நடவடிக்கையின்போது, ​​காவல்துறை மூன்று பேரைக் கைது செய்ததுடன், வஜிா்பூா் மற்றும் புராரியில் இரண்டு கிடங்குகளைக் கண்டுபிடித்து, பன்னிரண்டு லித்தியம் பேட்டரிகள் மற்றும் 73 பேட்டரி செல்களை மீட்டது.

அலிப்பூா் நடவடிக்கையில், ஒரு பெண் உள்பட ஆறு குற்றவாளிகளை காவல்துறை கைது செய்து, 76 லித்தியம் பேட்டரிகள் மற்றும் ஒரு எஸ்யூவி உட்பட பல பொருட்களை மீட்டது.

இரண்டு குற்றவாளிகளுக்கு இடையே சுமாா் ரூ. 22 லட்சம் மதிப்புள்ள நிதிப் பரிவா்த்தனைகளை காவல்துறை கண்டறிந்துள்ளது. இதர உறுப்பினா்களை அடையாளம் காண மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.