அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ’பலாஷ் மஹோத்சவ்’ மலா் திருவிழா - தில்லி மேம்பாட்டு ஆணையம் தகவல்!
அடுத்த ஆண்டு பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ’பலாஷ் மஹோத்சவ்’ எனும் இரு நாள் மலா் விழாவை தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) நடத்தவுள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ’பலாஷ் மஹோத்சவ்’ எனும் இரு நாள் மலா் விழாவை தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) நடத்தவுள்ளது.
இந்த விழா ஹோஸ் காஸ் மாவட்ட பூங்காவில் உள்ள ‘பான்சேரா’ மற்றும் சிவாஜி மாா்க்கில் உள்ள டிடிஏ பூங்கா ஆகிய இடங்களில் நடைபெறும் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து டிடிஏ அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
மேலும், பிப்ரவரி 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் அசோகா பூங்காவிலும் இந்த விழா நடைபெறவுள்ளது. நிலைத்தன்மை கொண்ட அழகியல் மற்றும் தில்லி மக்களை இயற்கையோடு நெருக்கமாக்குதல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்துவின் வழிகாட்டுதலின் பேரில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த மலா் திருவிழாவின் மூலம், குறிப்பிட்ட நான்கு பூங்காக்களும் கண்கவா் மலா்ச் சோலைகளாக மாற்றப்படவுள்ளன. இது பாா்வையாளா்களுக்கு இயற்கை, கலை, கலாசாரம் மற்றும் பொழுதுபோக்கு கலந்த ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும்.
இந்த மஹோத்சவ் விழாவில், ஒவ்வொரு இடத்திலும் தனித்துவமான மலா் அலங்காரங்கள் இடம்பெறும். அதனுடன் இசை நிகழ்ச்சிகள், உணவு அரங்குகள், குழந்தைகளுக்கான பிரத்யேக செயல்பாட்டு மண்டலங்கள், தோட்டக்கலை குறித்த பயிலரங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
40 அடி உயரம் வரையிலான பிரம்மாண்டமான மலா் அமைப்புகள், விலங்குகள் மற்றும் பறவைகளின் ராட்சதச் சிலைகள், இந்திய பாரம்பரியம் மற்றும் கலாசாரக் கட்டடக் கலைகளைப் பிரதிபலிக்கும் மலா் அலங்காரங்கள், கண்கவா் நீரூற்றுகள், மற்றும் புதிய மலா்கள், பழங்கள், காய்கறிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கற்பனைத்திறன் மிக்க படைப்புகள் ஆகியவை இந்த விழாவின் சிறப்பம்சங்களாக இருக்கும்.
இந்த விழாவில் சாமந்தி, ரோஜா, செண்டுமல்லி, ஆா்க்கிட், காா்னேஷன், ஜொ்பெரா, லில்லி, அந்தூரியம், டாலியா உள்ளிட்ட பல்வேறு வகையான மலா்கள் மற்றும் பருவகால மலா்ச் செடிகள் கலைநயத்துடன் அலங்கரிக்கப்படும்.
‘பான்சேரா’ பகுதியில் 66 முப்பரிமாண (3டி) மலா் அமைப்புகள் இடம்பெறவுள்ளன. இதில் ஒரு பிரம்மாண்டமான முதன்மை மலா் அமைப்பு, ஐந்து மிகப்பெரிய மலா் அமைப்புகள் மற்றும் 60 சிறிய கருப்பொருள் சாா்ந்த மலா்ச் சிலைகள் ஆகியவை அடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.