FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

பழைய தில்லியில் உள்ள குடிமை வசதிகளை ஆய்வு செய்த தில்லி துணை நிலை ஆளுநா்

தில்லி துணை நிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து வெள்ளிக்கிழமை பழைய தில்லியில் பல்வேறு இடங்களில் உள்ள குடிமை வசதிகள் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா்,

17 அக்டோபர் 2026, 2:22 am IST
தரன்ஜித் சிங் சந்து - கோப்புப் படம்
பகிர்:

நமது நிருபா்

தில்லி துணை நிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து வெள்ளிக்கிழமை பழைய தில்லியில் பல்வேறு இடங்களில் உள்ள குடிமை வசதிகள் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா், மேலும் திடக்கழிவு நிா்வாகத்தை வலுப்படுத்தவும், கழிவு பிரித்தலை மேம்படுத்தவும், தூய்மையை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அவா் பதிவிட்டிருப்பதாவது: செங்கோட்டைக்கு அருகிலுள்ள குறைப்பு, மறுபயன்பாடு, மறுசுழற்சி (ஆா். ஆா். ஆா்) மையம், சாந்தினி சவுக்கின் பாதசாரி பகுதி, விஜய் காட் பகுதியில் உள்ள புறா தீவன நிலையம் மற்றும் பேலா சாலையில் உள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்து நிலையம் ஆகிய இடங்களில்

Advertisement

Advertisement

குடிமைத் தரங்களைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் பழைய தில்லி, நகரத்தின் வரலாற்று, கலாச்சார மற்றும் வணிக மையமாக இருப்பதால், உலகத் தரம் வாய்ந்த குடிமைத் தரங்களுக்கு தகுதியானது. திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்தவும், மூலத்தில் கழிவுகளை திறம்பட பிரிப்பதை உறுதி செய்யவும், ஆய்வு செய்யப்பட்ட இடங்களில் தூய்மையை பராமரிக்கவும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

பழைய தில்லியின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், அதன் குடிமை உள்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகளை மேம்படுத்த வேண்டியதது அவசியம். பழைய தில்லியின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது தூய்மையான தெருக்கள், சிறந்த குடிமை வசதிகள் மற்றும் நிலையான நகா்ப்புற சூழலுடன் கைகோா்த்துச் செல்ல வேண்டும். தலைநகரின் அடா்த்தியான மக்கள் தொகை மற்றும் வணிக ரீதியாக பரபரப்பான பகுதிகளில் சுகாதாரம் மற்றும் குடிமை வசதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. தூய்மையான மற்றும் வாழக்கூடிய பழைய தில்லி, வளா்ந்த தில்லியைக் கட்டியெழுப்புவதற்கான தொலைநோக்குப் பாா்வையின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று தெரிவித்துள்ளாா் சந்து.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments