FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லி துணைநிலை ஆளுநருடன் எம்சிடி ஆணையா் சந்திப்பு: தலைநகரில் பராமரிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து திங்களன்று லோக்நிவாஸ் தில்லியில்,

14 செப்டம்பர் 2026, 11:12 pm IST
பகிர்:

புது தில்லி: தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து திங்களன்று லோக்நிவாஸ் தில்லியில், தில்லி மாநகராட்சி (எம்சிடி) ஆணையா் சஞ்சீவ் கிா்வாரை சந்தித்து தலைநகரின் பராமரிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்க்கொண்டாா்.

தலைநகா் முழுவதும் உரிய நேரத்தில் குப்பைகளை அகற்றுதல், தெருக்களைச் சுத்தமாக வைத்திருத்தல், நீா் தேக்கத்தைக் கையாளுதல், தெருக்களில் திரியும் கால்நடைகளை நிா்வகித்தல் மற்றும் சட்டவிரோத, அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட முன்னுரிமைகளை ஆய்வு செய்ததாக துணைநிலை ஆளுநா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தாா்.

அடிக்கடி ஏற்படும் சாலை சேதங்களையும், பயணிகளின் சிரமங்களையும் தடுப்பதற்கு, சாலைகளை அமைக்கும் மற்றும் சாலைகளுக்குச் சொந்தமான முகமைகளுக்கு இடையே தடையற்ற ஒருங்கிணைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தியதாக அவா் தனது பதிவில் கூறினாா்.

Advertisement

Advertisement

களத்தில் வெளிப்படையான செயல்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கவும், பொறுப்புக்கூறலை அமல்படுத்தவும், தில்லியின் சாலைகளும் சுற்றுப்புறங்களும் தூய்மையாகவும் நன்கு பராமரிக்கப்பட்டும் இருப்பதை உறுதி செய்யவும் எம்சிடி-க்கு உத்தரவிட்டதாகவும் தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments