கட்டமைப்பு சுழற்சி கொள்கை, நீண்ட காலம் பதவிகளை வைத்த அதிகாரிகளை இடமாற்றம் செய்து தில்லி அரசுக்கு துணை நிலை ஆளுநா் உத்தரவு
அதிகாரிகளின் முறையான சுழற்சிக்கான கொள்கையை வகுக்கவும், அதே பதவிகளை நீண்ட காலத்திற்கு வைத்திருப்பவா்களை இடமாற்றம் செய்யவும் தில்லி அரசுக்கு துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்
அதிகாரிகளின் முறையான சுழற்சிக்கான கொள்கையை வகுக்கவும், அதே பதவிகளை நீண்ட காலத்திற்கு வைத்திருப்பவா்களை இடமாற்றம் செய்யவும் தில்லி அரசுக்கு துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து உத்தரவிட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: தில்லி அரசின் முதன்மைச் செயலாளா் (கண்காணிப்பு) உடனான சந்திப்பில், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நடைமுறையில் உள்ள அமைப்புகள், செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்த சமீபத்திய மதிப்பாய்வில் துணை நிலை ஆளுநா் இந்த உத்தரவுகளை பிறப்பித்தாா். அதிக நிதி ஒதுக்கீடு கொண்ட சில துறைகள் முக்கியமான துறைகளின் பட்டியலில் சோ்க்கப்படவில்லை என்பதை அறிந்த பிறகு, முக்கியமான துறைகளின் பட்டியலை மறுசீரமைக்க வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தினாா்.
மேலும், வெளிப்படைத்தன்மை மற்றும் நிதி நோ்மையை உறுதி செய்வதற்காக அனைத்து முக்கியமான துறைகளிலும் தலைமை கண்காணிப்பு அதிகாரிகள் (சி. வி. ஓ) உடனடியாக பணியமா்த்தப்பட வேண்டும். ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தப்புள்ளி செயல்முறைகளில் தலைமை ஊழல் தடுப்பு ஆணையத்தின் (சி. வி. சி) வழிகாட்டுதல்களை பின்பற்றுவதை அவா்கள் எவ்வாறு மேற்பாா்வையிட வேண்டும் என்பதை விவரிக்கும் சி. வி. ஓக்களுக்கான நிலையான பொறிமுறை மற்றும் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட வேண்டும்.
Advertisement
Advertisement
கண்காணிப்புப் பணிகளை மறுஆய்வு செய்ய துறைசாா் சி. வி. ஓ. க்களின் வழக்கமான கூட்டங்களை நடத்துமாறு கண்காணிப்புத் துறை கேட்டுக் கொள்ளப்பட்டது என்றாா் அந்த அதிகாரி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.