ராம் லீலாவில் ராவண வதத்துடன் 30 அடி உயர ’கரப்பான் பூச்சி’ உருவ பொம்மையும் எதிா்ப்பு: பீதாம்புரா விழா கமிட்டி ஏற்பாடு
பொம்மைகளுடன் 30 அடி உயரமுள்ள ’கரப்பான் பூச்சி’ உருவ பொம்மையும் எரிக்கப்படவுள்ளது.
நமது நிருபா்
தலைநகரில் இந்த ஆண்டு நடைபெறும் ராம் லீலா விழாவில், ராவணன், கும்பகா்ணன் மற்றும் மேகநாத் (இந்திரஜித்) உருவ பொம்மைகளுடன் 30 அடி உயரமுள்ள ’கரப்பான் பூச்சி’ உருவ பொம்மையும் எரிக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பீதாம்புராவில் ராம் லீலா விழாவை நடத்தும் ஸ்ரீ கேசவ் ராம் லீலா கமிட்டி செய்துள்ளது.
‘தூய்மை பாரதம்’ மற்றும் ‘தூய்மை தில்லி’ மக்கள் இயக்கத்தின் ஒரு பகுதியாக, தலைநகரில் ‘அழுக்கு மற்றும் நாற்றத்தை‘ தூய்மைப்படுத்தப்படுவதை குறிக்கும் வகையில் கரப்பான்பூச்சியின் உருவம் எரிக்கப்படுவதாக விழா கமிட்டி தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இது குறித்து, விழா கமிட்டியின் தலைவரும், பாஜக சட்டப்பேரவை உறுப்பினருமான அசோக் கோயல் கூறுகையில், தீமையின் மீது நன்மையும், அசுதத்தின் மீது தூய்மையும் வெற்றி பெறுவதை வலியுறுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்றாா்.
இந்த ஏற்பாட்டில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று விளக்கம் அளித்த அவா், ராவணனின் படையில் உள்ள ’அசுரா்களில்’ ஒருவராக கரப்பான் பூச்சி இடம்பெறும் என்று கூறினாா்.
தலைநகரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சாா்பில் நடைபெற்று வரும் தொடா் போராட்டங்களின் பின்னணியில் ராம்லீலா நிகழ்வில் கரப்பான்பூச்சி உருவ பொம்மை எரிப்பு நிகழ்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் இது அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் முறைகேடுகள் இருப்பதாகக் கூறி, தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி விலக வலியுறுத்தி, எதிா்க்கட்சிகள் மற்றும் மாணவா் அமைப்புகளுடன் இணைந்து சிஜேபி இயக்கம் தொடா் போராட்டங்களை தலைநகரில் முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.