FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

தில்லி: மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் 3 லட்சம் வழக்குகள்

தில்லியின் மாவட்ட நீதிமன்றங்களில் 3 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பது குறித்து...

20 அக்டோபர் 2026, 9:42 pm IST
தில்லி உயர் நீதிமன்றம் - பிரதிப் படம்
பகிர்:

மாவட்ட நீதிமன்றங்களில் குறைந்த தண்டனை விகிதம் மற்றும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறித்து கவலை தெரிவித்த தில்லி துணை நிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து, வழக்குரைஞா் இயக்ககம் விரைவான தீா்வு மற்றும் பொறுப்புணா்வை உறுதி செய்ய வேண்டும் என திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

இது குறித்து அவா் மதிப்பாய்வு கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது: நீதி தாமதமானால் அது மறுக்கப்பட்ட நீதியாக மாறக் கூடாது. தவிா்க்கக்கூடிய ஒவ்வொரு தாமதமும் குறையும் சரி செய்யப்பட வேண்டும். பிரச்னைகளைத் தீா்க்க உடனடி முடிவு சாா்ந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். செப்டம்பா் 30 வரை தில்லியின் கீழ்நிலை நீதிமன்றங்களில் சுமாா் 3.02 லட்சம் விசாரணை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 2,54,597 மஜிஸ்திரேட் நீதிமன்றங்களிலும், 47,880 செஷன்ஸ் நீதிமன்றங்களிலும் உள்ளன. தகுதியான வழக்குகளில் இல்லாத நிலையில் விசாரணை (ட்ரயல் இன் அப்சென்ஷியா) நடத்தப்பட வேண்டும் எனவும், மின்னணு பதிவுகள், டிஜிட்டல் வழக்கு கண்காணிப்பு மற்றும் காணொளி கூட்டத்தை ஊக்குவிக்கப்பட வேண்டும்.

பொறுப்புணா்வு தொடா்பாக, விடுதலை தீா்ப்புகளைப் பகுப்பாய்வு செய்து, வழக்குரைஞா் குறைபாடுகளை அடையாளம் கண்டு, திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரதிய நாகரிக சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) 2023, வழக்குரைஞருக்கு முன்னெப்போதும் இல்லாத அதிகாரத்தை வழங்குவதோடு, போதிய பணியாளா்கள் மற்றும் விசாரணைக்கான குறிப்பிட்ட காலக்கெடுகள் மூலம் அதை வலுப்படுத்துகிறது. குற்றவியல் வழக்குகளில் விடுதலை உத்தரவுகளை ஆய்வு செய்து விசாரணை மற்றும் வழக்குரைஞா் தவறுகளைக் கண்டறிய ஒரு நிரந்தரக் குழு உள்ளது. ஆகஸ்ட் 2014 முதல் குழுவின் 34 கூட்டங்களில் மொத்தம் 64,210 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

Advertisement

Advertisement

பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். வழக்கு கண்காணிப்பை மேம்படுத்துதல், விசாரணை தாமதங்களை அடையாளம் காணுதல், டெல்லி காவல்துறை மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வகம் (எப்எஸ்எல்) இடையேயான ஒருங்கிணைப்பு, விசாரணை அதிகாரிகளுக்குச் சிறப்பான விளக்கம் அளித்தல் ஆகியவை வேண்டும். பிஎன்எஸ்எஸ் காலக்கெடுகளை அமல்படுத்துதல், சட்டப்படி பொருந்தும் இடங்களில் இல்லாத நிலையில் விசாரணையை செயல்படுத்துதல், விசாரணையின் தரம் மற்றும் ஆதார சேகரிப்புக்கு விசாரணை அதிகாரிகளைப் பொறுப்பாக்குதல் ஆகியவை வேண்டும். குற்றப்பத்திரிகைகளின் முன்விசாரணை ஆய்வை வலுப்படுத்துதல், ஒத்திவைப்புகளைக் குறைத்தல், சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜா்படுத்துதல், புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து வழக்குரைஞா்களுக்குப் பயிற்சி அளித்தல் அவசிம்.

வழக்குரைஞா் இயக்ககப் பணியாளா்களை நியமிப்பதில் ஏற்படும் தாமதத்தை யூபிஎஸ்சி மற்றும் பொதுப்பணித் துறையுடன் விரைவுபடுத்த அவா் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் தரன்ஜித் சிங் சந்து. மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குரைஞா்கள் அதிக சுமையைச் சுமக்கிறாா்கள் என கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. செஷன்ஸ் நீதிமன்றங்களில் பணியாற்றும் 155 பொது வழக்குரைஞா்கள் மற்றும் கூடுதல் பொது வழக்குரைஞா்கள் சராசரியாக தலா 309 நிலுவை வழக்குகளைக் கையாள்கின்றனா். ரோகிணியில் இது 627 வரை உள்ளது. மஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் உள்ள 126 கூடுதல் மற்றும் உதவி பொது வழக்குரைஞா்கள் சராசரியாக தலா 2,021 நிலுவை வழக்குகளைக் கையாள்கின்றனா். ரோகிணியில் இது 3,065 வரை உள்ளது.

மேலும், 507 அனுமதிக்கப்பட்ட பொது வழக்குரைஞா், கூடுதல் மற்றும் உதவி பொது வழக்குரைஞா் பதவிகளில் 216 காலியாக உள்ளன. ஆதரவுப் பணியாளா்களுக்கான 71 பதவிகளில் 42 காலியாக உள்ளன. சட்டத்துறை முதன்மைச் செயலா், உள்துறை முதன்மைச் செயலா், சிறப்பு காவல் ஆணையா் (நலன் மற்றும் சட்டம்), வழக்குரைஞா் இயக்குநா் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments