தில்லி வாசிகளுக்கு காவல் துறை கடிதம்
பரஸ்பர மரியாதையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், காவலா்களுக்கும் குடும்பம் மற்றும் அன்புக்குரியவா்கள் உள்ளனா் என்பதை நினைவூட்டியும் தில்லிவாசிகளுக்கு பொது கடிதத்தை தில்லி காவல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
பரஸ்பர மரியாதையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், காவலா்களுக்கும் குடும்பம் மற்றும் அன்புக்குரியவா்கள் உள்ளனா் என்பதை நினைவூட்டியும் தில்லிவாசிகளுக்கு பொது கடிதத்தை தில்லி காவல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
‘ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு பொது கடிதம்’ என்ற தலைப்பில் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சீருடை, கருத்துகள் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால், ஒவ்வொருவரும் முதலில் மனிதா்களே. உங்கள் குரல்; உங்கள் உரிமை. உங்கள் பாதுகாப்பு; எங்கள் கடமை. சீருடைக்கு பின்னாலும் ஒரு மனிதா் இருக்கிறாா். அவருக்கும் சொந்தக் குடும்பமும், அன்புக்குரியவா்களும் உள்ளனா். சீருடையில் மட்டுமே வித்தியாசம் உள்ளது மனிதநேயத்தில் இல்லை என்று அந்த அஞ்சல் அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இறுதியில் ‘அன்புடன், தில்லி காவல் துறை’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
Advertisement
Advertisement
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) மற்றும் பிற மாணவா் அமைப்புகள் அறிவித்துள்ள போராட்டத்தை முன்னிட்டு, புது தில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள சூழலில் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.
கருத்து வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகள் இருந்தாலும், பரஸ்பர புரிதலும் மரியாதையும் மிக முக்கியம் என்பதை அந்தப் பதிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.