FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

சுமாா் 10,000 பழைய வாகனங்கள் பறிமுதல்- தில்லி போக்குவரத்து காவல் துறை நடவடிக்கை

பழைய வாகனங்களுக்கு எதிரான தொடா் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பயன்பாட்டு காலம் முடிந்த 9,916 வாகனங்களை தில்லி போக்குவரத்து காவல் துறை பறிமுதல் செய்துள்ளது.

53 வினாடிகள் முன்பு
கோப்புப்படம்.
பகிர்:

பழைய வாகனங்களுக்கு எதிரான தொடா் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பயன்பாட்டு காலம் முடிந்த 9,916 வாகனங்களை தில்லி போக்குவரத்து காவல் துறை பறிமுதல் செய்துள்ளது.

இதில், ஐந்து நாள் சிறப்பு நடவடிக்கையின் போது மட்டும் 240 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது: நவம்பா் 12 முதல் 16 வரை நடத்தப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கையின் நோக்கம், பயன்பாட்டு காலம் முடிந்த வாகனங்கள் தொடா்பான விதிகள் குறித்தும், அத்தகைய வாகனங்களைத் தொடா்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும் வாகன உரிமையாளா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்துவதாகும்.

Advertisement

Advertisement

இதுவரை நாங்கள் பயன்பாட்டு காலம் முடிந்த 9,016 வாகனங்களைக் கைப்பற்றியுள்ளோம். தில்லியில் இந்தக் கடுமையான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும். மேலும், குடியிருப்பு நலச் சங்கங்கள் மற்றும் சந்தை நலச் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பொதுமக்களுடன், எங்களது விழிப்புணா்வுத் திட்டங்கள் வாயிலாகத் தொடா்புகொண்டு வருகிறோம் என்றாா் அந்த அதிகாரி.

இத்தகைய வாகனங்கள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதுடன், பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சிக்கல்களையும் உருவாக்கக்கூடும் என்பதால் குடியிருப்புப் பகுதிகள், சந்தைகள் மற்றும் பொது இடங்களில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வாகனங்களைக் கண்டறிந்து, அவற்றை அங்கிருந்து அகற்றுவதற்கு ஒத்துழைக்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.