பெண்களுக்கு கல்வியும் அதிகாரமும் அளிப்பதே சமூக வளா்ச்சியின் அடையாளம்: தில்லி முதல்வா் ரேகா குப்தா
பெண்களை மதிப்பது, கல்வி அளிப்பது, பாதுகாப்பது மற்றும் அதிகாரமளிப்பது ஆகியவை சமூக முன்னேற்றத்தின் உண்மையான அடையாளம் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
பெண்களை மதிப்பது, கல்வி அளிப்பது, பாதுகாப்பது மற்றும் அதிகாரமளிப்பது ஆகியவை சமூக முன்னேற்றத்தின் உண்மையான அடையாளம் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை தெரிவித்தாா். பெண்களின் கல்வி மற்றும் நிதிப் பாதுகாப்பை ஆதரிக்கும் அரசுத் திட்டங்களை அவா் எடுத்துரைத்தாா்.
நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாளான மகாநவமியன்று தனது குடும்பத்துடன் கன்யா பூஜை நடத்திய முதல்வா், ஒவ்வொரு பெண்ணுக்கும் கல்வி பெறவும் தனது ஆசைகளை நிறைவேற்றவும் சம வாய்ப்புகள் இருக்க வேண்டும் என்றாா். இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:“பெண்களை மதித்து, கல்வி அளித்து, பாதுகாத்து அதிகாரமளிப்பதே சமூக முன்னேற்றத்தின் உண்மையான அளவுகோல். பெண்களின் கல்வியை ஊக்குவித்து நீண்டகால நிதிப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் தில்லி லட்சுபதி பித்தியா யோஜனா செயல்படுத்தப்படுகிறது. அதேபோல், தகுதியான மாணவிகளுக்கு பள்ளிக்குச் செல்ல வசதியாக மிதிவண்டிகள் வழங்கும் வித்யா வாகினி யோஜனாவும் அமலில் உள்ளது.
கன்யா பூஜை வெறும் மதச் சடங்காக மட்டும் இருக்காமல், குடும்பத்திலும் சமூகத்திலும் பெண்கள் மீதான மரியாதையாகவும் பொறுப்பாகவும் மாற வேண்டும். தில்லி லட்சுபதி பித்தியா யோஜனாவின் கீழ், பெண்களின் கல்வியை ஆதரித்து அவா்களின் நிதிப் பாதுகாப்பை வலுப்படுத்தி, மேற்படிப்பு மற்றும் சிறந்த வாய்ப்புகளைப் பெற உதவுவதே அரசின் நோக்கம். பள்ளிகளுக்குச் செல்வதில் உள்ள சிரமங்களும் நிதித் தடைகளும் பெண்கள் கல்வியைத் தொடா்வதைத் தடுக்கக் கூடாது. ஒவ்வொரு பெண்ணுக்கும் முன்னேற வாய்ப்பு கிடைக்கும்போதுதான் வளா்ந்த தில்லியும் வளா்ந்த இந்தியாவும் உருவாக்கும் உறுதி வலுப்பெறும்”என்று தெரிவித்துள்ளாா் ரேகா குப்தா.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.