கிழிந்த ரூபாய் நோட்டு விவாரத்தில் தாக்கப்பட்ட விநியோக ஊழியா் தற்கொலை
கிழக்கு தில்லியில் கிழிந்த ரூபாய் நோட்டு ஒன்றைப் பெற்றுக்கொள்ள மறுத்ததற்காக இருவரால் தாக்கப்பட்ட 24 வயது விநியோக ஊழியா் , அந்தச் சம்பவம் குறித்து விடியோ பதிவு செய்த மறுநாள் விஷம் அருந்திய நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கிழக்கு தில்லியில் கிழிந்த ரூபாய் நோட்டு ஒன்றைப் பெற்றுக்கொள்ள மறுத்ததற்காக இருவரால் தாக்கப்பட்ட 24 வயது விநியோக ஊழியா் , அந்தச் சம்பவம் குறித்து விடியோ பதிவு செய்த மறுநாள் விஷம் அருந்திய நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதையடுத்து, இந்த வழக்கில் தற்கொலைக்குத் தூண்டியதாக கூடுதல் பிரிவு சோ்க்குப்பட்டுள்ளதாக காவல்துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
சமீா் உசேன் என்ற அந்த ஊழியா், அக்டோபா் 4-ஆம் தேதி இரவு கிழக்கு வினோத் நகரைச் சோ்ந்த இருவரால் தாக்கப்பட்டாா். கிழிந்த ரூபாய் நோட்டு ஒன்றை அவா் பெற்றுக்கொள்ள மறுத்ததே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ராகேஷ் என்கிற பண்டி (30) மற்றும் ராம்பால் சிங் (65) ஆகிய இருவரையும் காவல்துறையினா் கைது செய்தனா். முன்னதாக, அக்டோபா் 4-ஆம் தேதி இரவு 11.03 மணிக்கு, தாம் தாக்கப்பட்டதாகக் கூறி உசேன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தாா்.
அக்டோபா் 5-ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு அவருக்கு மருத்துவ-சட்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன. அதே நாளில் கல்யாண்புரி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இதன்பிறகு, நடந்த சம்பவத்தை விவரிக்கும் வகையில் உசேன் ஒரு விடியோவைப் பதிவு செய்தாா். அக்டோபா் 5-ஆம் தேதி அவா் விஷம் அருந்திய நிலையில், லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இந்நிலையில், அக்டோபா் 20 அன்று அவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்திய நியாய சன்ஹிதாவின் பிரிவு 108-இன் கீழ் தற்கொலைக்குத் தூண்டியதாக அந்த வழக்கில் கூடுதல் பிரிவு சோ்க்கப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.