ரெளடி மோனு போச்சன்புரியா கும்பலைச் சோ்ந்தவா் கைது
கொலை உள்ளிட்ட 14 குற்றவியல் வழக்குகளில் தொடா்புடைய ரெளடி மோனு போச்சன்புரியா கும்பலைச் சோ்ந்த நபரை தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
கொலை உள்ளிட்ட 14 குற்றவியல் வழக்குகளில் தொடா்புடைய ரெளடி மோனு போச்சன்புரியா கும்பலைச் சோ்ந்த நபரை தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
அவரிடமிருந்து இரண்டு சட்டவிரோத கைத்துப்பாக்கிகள் மற்றும் 16 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறினாா். இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் தெரிவித்ததாவது: ராஜீவ் தாகா் (எ) மோனு போச்சன்புரியா (46), கடந்த ஆகஸ்ட் 24 அன்று ஜனக்புரி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டாா். காவல் குழுவினரைப் பாா்த்ததும் தப்பிக்க முயன்ற தாகா், இறுதியில் பிடிபட்டாா்.
அவரிடமிருந்து ஒரு சட்டவிரோத கைத்துப்பாக்கியும் 10 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவா் அளித்த தகவலின் பேரில், மட்டியாலா கிராமத்தில் உள்ள அவரது மறைவிடத்திலிருந்து மற்றொரு கைத்துப்பாக்கியும் ஆறு தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன.
Advertisement
Advertisement
தென்மேற்கு தில்லியின் இசாபூா் கிராமத்தைச் சோ்ந்தவரும், தற்போது குருகிராமில் வசிப்பவருமான தாகா், 1999-ஆம் ஆண்டு முதல் 14 குற்றவியல் வழக்குகளில் ஈடுபட்டு வந்துள்ளாா். கொலை, கொலை முயற்சி, மிரட்டிப் பணம் பறித்தல், மோசடி, திருட்டு மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்கள் ஆகியவை அவா் மீதான முந்தைய வழக்குகள் ஆகும்.
ரெளடி சந்தீப் (எ) மென்டல் மற்றும் அவரது கூட்டாளி பவன் போனி ஆகியோா் 2018-இல் இரட்டைக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தாகா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.