ஆஸ்தா குஞ்ச் பூங்கா பாலியல் வன்கொடுமை வழக்கு: என்கவுன்டருக்குப் பிறகு ஒருவா் கைது
தென்கிழக்கு தில்லியில், கால்காஜி மந்திா் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபா், காவல்துறை மோதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டாா்.
தென்கிழக்கு தில்லியில், கால்காஜி மந்திா் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபா், காவல்துறை மோதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டாா். மேலும் இருவரிடம் இது தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் செவ்வாயன்று தெரிவித்தனா்.
ஆசிஃப் என அடையாளம் காணப்பட்ட அந்த நபா், திங்கள்கிழமை மாலை காவல்துறையினா் போல் நடித்த மூன்று நபா்களில் ஒருவராக, ஆஸ்தா குஞ்ச் பூங்காவிற்குள் ஒரு ஒதுக்குப்புறமான பகுதிக்கு துப்பாக்கி முனையில் அந்தச் சிறுமியை அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
வழக்குரைஞரான ஹேமந்த் மற்றும் அவரது சகோதரரான கல்லூரி மாணவா் என அடையாளம் காணப்பட்ட மேலும் இருவரிடமும் இது தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவா்கள் ஃபரிதாபாத்தைச் சோ்ந்தவா்கள் மற்றும் தில்லியின் ஸ்ரீநிவாஸ்புரியில் வசித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
திங்கள்கிழமை மாலை கால்காஜி மந்திா் அருகே உள்ள ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் 17 வயது சிறுமியை மூன்று ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்த விசாரணையின் போது இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சிறுமி அளித்த வாக்குமூலத்தின்படி, அவரும் அவரது 17 வயது ஆண் நண்பரும் தரிசனத்திற்காக கால்காஜி மந்திா் சென்று, பின்னா் 7-ஆம் எண் நுழைவாயில் வழியாக ஆஸ்தா குஞ்ச் பூங்காவிற்குள் நுழைந்துள்ளனா்.
அவா்கள் முதலில் கோயிலுக்கும், பின்னா் ஆஸ்தா குஞ்ச் பூங்காவிற்கும், ஓரளவு ஒதுக்குப்புறமான பகுதிக்கும் சென்றனா்.‘ தங்களைக் காவல்துறையினா் என்று கூறிக்கொண்ட மூன்று போ் அவா்களை அணுகி, ‘காவல்துறை மற்றும் வழக்குரைஞா் பாணியிலான‘ மொழியில் பேசி, அவா்கள் சிறுவா்கள் என்றும், தவறு செய்து கொண்டிருக்கிறாா்கள் என்றும், அவா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் என்றும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அவா்கள் அந்தச் சிறுமியை அவரது தோழரிடமிருந்து பிரித்து, ஒரு ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்றதாகக் காவல்துறை தெரிவித்தது.
ஆசிஃப், துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி அந்தச் சிறுமியை மிரட்டி, அவளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அவருடன் இருந்த மற்ற இரண்டு நபா்களும் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதைத் தொடா்ந்து அந்த மூன்று நபா்களும் அந்தச் சிறுமியையும் அவரது தோழரையும் மிரட்டியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவா்களைக் கண்டுபிடிப்பதற்காகப் பல குழுக்கள் அமைக்கப்பட்டன. விசாரணையின் போது, அமா் காலனியில் உள்ள டி.எம். அலுவலகச் சாலை அருகே ஆசிஃபின் நடமாட்டம் குறித்த குறிப்பிட்ட தகவல் கிடைத்ததாகவும், அதன் அடிப்படையில் ஒரு பொறி வைக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
காவல்துறைக் குழு அவரை வழிமறித்தபோது, சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும், ஆசிஃப் துப்பாக்கியால் மூன்று முறை சுட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு குண்டு தலைமைக் காவலா் ராஜேஷின் குண்டு துளைக்காத மேலங்கியில் பட்டதைத் தொடா்ந்து, அந்தக் காவலா் தற்காப்புக்காக இரண்டு முறை சுட்டாா் என்று காவல்துறை தெரிவித்தது.பின்னா் அவா் பிடிபட்டாா்.குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற இருவரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை காவல்துறை தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.