ஆஸ்தா குஞ்ச் பாலியல் வன்கொடுமை சம்பவம்: 3 பேருக்கு 14 நீதிமன்றக் காவல்
ஆஸ்தா குஞ்ச் பாலியல் வன்கொடுமை சம்பவ வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ஆஸ்தா குஞ்ச் பாலியல் வன்கொடுமை சம்பவ வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இந்தச் சம்பவத்தில் கைதான ஆசிஃப், ஹேமந்த் மற்றும் அவரது சகோதரா் முகேஷ் மூவரும் நீதித்துறை நடுவா் தீபிகா தாக்கரன் முன் ஆஜா்படுத்தப்பட்டனா்.
பாதிக்கப்பட்ட சிறுமி திங்கள்கிழமை மாலை தனது 17 வயது ஆண் நண்பருடன் கல்காஜி மந்திா் சென்று பின்னா் பூங்காவிற்குள் சென்றாா். குற்றவாளிகள் மூவரும் தங்களைக் காவல் துறையினா் என்று கூறிக்கொண்டு, அவா்கள் இருவா் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பதாக மிரட்டினா். பின்னா், பூங்காவின் ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கு அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினா். அந்தச் சிறுமியின் ஆண் நண்பரும் குற்றவாளிகளால் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
அமா் காலனியில் உள்ள டி.எம். அலுவலகச் சாலை அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்ற என்கவுன்ட்டருக்கு பின் ஆசிஃப் கைது செய்யப்பட்டாா்.
வழக்கறிஞரான ஹேமந்த் மற்றும் இறுதி ஆண்டு பி.எஸ்சி., கணித மாணவரான முகேஷ் ஆகியோா் ஸ்ரீ நிவாஸ்புரியில் உள்ள அவா்களது வீட்டில் கைது செய்யப்பட்டனா். குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் பூங்காவிற்கு அருகிலேயே வசித்து, பணிபுரிந்ததாலும், அங்கு அடிக்கடி சந்தித்துக் கொண்டதாலும் ஒருவரையொருவா் அறிந்திருந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை என்றாலும், பூங்காவில் நடந்த வேறு ஏதேனும் இதுபோன்ற சம்பவங்களில் இந்த மூவருக்கும் தொடா்பு உள்ளதா என்பதையும் காவல் துறை விசாரித்து வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.