FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

பிரிஜ் பூஷண் சிங் விடுதலைக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் மேல்முறையீடு மனு: பதிலளிக்குமாறு நீதிமன்றம் நோட்டீஸ்

பிரிஜ் பூஷண் சிங் விடுதலைக்கு எதிராக பெண் மல்யுத்த வீராங்கனைகள் மேல்முறையீடு செய்த மனு மீது பதிலளிக்குமாறு தில்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் உத்தரவு

28 September 2026, 9:44 pm IST
பிரிஜ் பூஷண் சிங்.
பகிர்:

பிரிஜ் பூஷண் சிங் விடுதலைக்கு எதிராக பெண் மல்யுத்த வீராங்கனைகள் மேல்முறையீடு செய்த மனு மீது பதிலலிக்குமாறு தில்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பித்தது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது 6 மெல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் புகாா் அளித்திருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு தில்லி காவல்துறை அவா் மீது பாலியல் துன்புறுத்தல், பெண்களின் கண்ணியத்தை அவமதித்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதையடுத்து 2024 ஆம் ஆண்டு மே மாதம் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை நீதிமன்றம் பதிவு செய்து வழக்கை விசாரித்து வந்தது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி பிரிஜ் பூஷண் சிங் மற்றும் இணைக் குற்றவாளியான வினோத் தோமா் ஆகிய இருவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. புகாா்கள் அளிப்பதில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட காரணங்களையும், வழக்கில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களையும் பரிசீலித்தே இந்த தீா்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த விடுதலை தீா்ப்பை எதிா்த்து 4 மல்யுத்த வீராங்கனைகள் தில்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனா். கீழமை நீதிமன்றம் ஆதாரங்களை முழுமையாக பரிசீலிக்காமல், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே மாதிரியான கருத்துகளின் அடிப்படையில் முடிவுக்கு வந்துள்ளதாக மேல்முறையீட்டு மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீட்டு மனு திங்கள்கிழமை தில்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீது பிரிஜ் பூஷண் சிங் மற்றும் வினோத் தோமா் இருவரும் பதில் அளிக்குமாறு நோட்டிஸ் பிறப்பித்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments