அறிவியல்பூர்வமான இந்து சமயம்
இந்து சமய புராண கதை, தெய்வ உருவம் மற்றும் இலச்சினை, ஆயுதங்கள் எல்லாமும் பொருள் பொதிந்தவை என்பதை உணர்த்தி விடுகிறார். இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
அறிவியல்பூர்வமான இந்து சமயம்-என்.பி.ஏ.ரவி; பக். 258; ரூ. 456; இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர், மலேசியா. ✆ 9944774835
புத்தகத்தின் தலைப்பிலேயே மிகத் தெளிவாக அறிவித்துள்ளதைப் போலவே, இந்து மதத்தின் தெய்வங்கள், அடையாள குறியீடுகள், கதைகள் எல்லாமும் அணுவியல் சார்ந்தவை என்பதை நிறுவுகிறார் நுôலாசிரியர்.
சூரியக்குடும்பத்தில் இடம்பெறும் யாவும், உயிருள்ளவை மற்றும் பருப்பொருள் அனைத்தும் அணுக்கரு இணைவு அல்லது அணுக்கரு பிளவின் விளைவுகள் என்பதை அறிவியல் கோட்பாடுகளுடன் விளக்குகிறார்.
Advertisement
Advertisement
விநாயகர் ஏன் ஏகதந்தன் என்று அழைக்கப்படுகிறார், அவருக்கு ஏன் யானை முகம் வழங்கப்பட்டது என்பது குறித்து விளக்கும்போது விநாயகரையும் ஹைட்ரஜன் தனிம அணுவையும் ஒப்பிடுகிறார்.
ஒரு முழுமையான அணுக் கட்டமைப்பு என்பது உட்கருவில் புரோட்டான் மற்றும் நியூட்ரான் இருப்பதுடன் அதன் ஆற்றல் மட்டத்தில் சுற்றி வரும் எலக்ட்ரான் இருக்க வேண்டும். ஆனால், ஹைட்ரஜன் தனிம அணுவில் இந்தக் கட்டமைப்பு முழுமை பெறாமல் அதன் உட்கரு நியூட்ரான் இல்லாமல், ஒரு எலக்ட்ரான் மட்டுமே உள்ளது. ஒரு எலக்ட்ரான் கொண்டுள்ள ஹைட்ரஜன் தனிம அணு, மிக எளிதில் வேதிவினை புரிந்து புதிய மூலக்கூறுகளையும் சேர்மங்களையும் உருவாக்கும் வல்லமையைப் பெற்றுள்ளது.
தனிம அணுக்களின் வரிசையில் வேதிவினைகளின் மூலமுதல்நாயகன் என்றால் அது ஹைட்ரஜன் தனிம அணுதான். ஆகவே, வினை நாயகன் என்ற பொருளில், விநாயகன் என அழைக்கப்படுகிறார். எல்லா நிகழ்ச்சியிலும் முதல்மூலமாக வழிபடப்படுகிறார். ஹைட்ரஜன் முழுமை பெறாத கட்டடமைப்பு என்பதால், விநாயகருக்கு யானைத் தலை மனித உடல். அதேபோன்று, ஒரே எலக்ட்ரான் என்பதால், ஒரு தந்தம் உடைக்கப்பட்டு, ஏகதந்தனாக காட்சி தருகிறார்.
தனிம அணு அட்டவணையில் 6-ஆவது இடத்தில் உள்ள கார்பன் - ஆறுமுகம் கொண்ட முருகக் கடவுளுக்கு ஒப்பிடப்படுகிறது.
அணுப்பிளவுக்கு சிவனின் அடி முடி தேடும் அரி, அயன் கதையை ஒப்பிடுகிறார்.
இந்து சமய புராண கதை, தெய்வ உருவம் மற்றும் இலச்சினை, ஆயுதங்கள் எல்லாமும் பொருள் பொதிந்தவை என்பதை உணர்த்தி விடுகிறார். இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.