FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நூல் அரங்கம்

ஹோமரின் ஒடிசி: காவியச் சுருக்கம்

ஒடிஸிக்கு மிகுந்த மரியாதை அளித்தாலும் உதவ முடியாத நிலை, ஒடிஸியஸின் பாதாள உலகப் பயணம் என பக்கத்துக்குப் பக்கம் வீர சாகசங்கள்தான். மேற்கத்திய இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்பை எளிமையாக சுருக்கித் தந்துள்ளார் நூலாசிரியர்.

Updated On : 20 ஜூலை 2026, 6:44 pm IST
பகிர்:

ஹோமரின் ஒடிசி: காவியச் சுருக்கம்- அனந்தசாய்ராம் ரங்கராஜன்; பக். 152; ரூ. 190; சுவாசம் பதிப்பகம், சென்னை- 600 127, ✆ 81480 66645.

ஹோமர் இயற்றிய கிரேக்க இலக்கியத்தின் சிகரமான ஒடிஸி, இலியட் காப்பியத்தின் தொடர்ச்சியாக அமைந்தது. ட்ரோஜன் போருக்குப் பின்னர் தனது தாயகமான இதாகாவுக்குத் திரும்பப் போராடும் மன்னன்

ஒடிஸியஸின் வீரம் நிறைந்த பயணத்தை விவரிக்கிறது ஒடிஸி காவியம். நவீன வாசகர்களின் வாசிப்புக்கு ஏற்ப சுருக்கப்பட்டுள்ள இந்த நூல் மூலத்தின் உணர்வுகளை, தொடர்ச்சிகளைச் சிதைக்காமல் இருப்பது தனிச் சிறப்பு.

Advertisement

Advertisement

ட்ரோஜன் போர் முடிந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தனது நாட்டுக்குத் திரும்ப முடியாமல், ஓஜிஜியா தீவில் கலிப்ஸோ என்ற தேவதையால் சிறைபிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த மன்னன் ஒடிஸியஸýக்கு ஞானத்தின் தேவதையான அதீனா உதவுவதில் தொடங்கும் இந்தக் காப்பியம்

அடுத்தடுத்து எதிர்பார்க்க இயலாத திருப்பங்களுடன் விறுவிறுப்பாகச் செல்கிறது.

தந்தையைத் தேடி இதாகாவிலிருந்து புறப்படும் ஒடிஸியஸின் மகன் டெலிமாக்கஸ், அதீனா தேவதையின் உதவியுடன் தனது சொந்த அடையாளத்தை நிலைநாட்டத் தயாராவது இந்தக் காப்பியத்தின் இனிமையான திருப்பம். தேவர்களின் கடவுளான ஜீயஸிடம் வாதாடி, கலிப்ஸோ தேவதையின் பிடியிலிருந்து ஒடிஸியûஸ விடுவிக்கிறார் அதீனா தேவதை. ஆனால், கடல் கடவுளான போஸிடானின் சாபத்தால் கடலில் கப்பல் உடைந்து ஒடிஸியஸ் தவிப்பதும், அதிலிருந்து அவன் மீள்வதும் சொல்லப்பட்டிருக்கும் விதம் ஒரு சாகசத்தை நேரில் பார்த்த உணர்வைத் தருகிறது.

ஒடிஸியஸின் வருகைக்காக காத்திருக்கும் அவனது மனைவி பெனிலோப்பின் ஏக்கம், பொறுமை, காற்றின் கடவுளான ஏயோலஸ்

ஒடிஸிக்கு மிகுந்த மரியாதை அளித்தாலும் உதவ முடியாத நிலை, ஒடிஸியஸின் பாதாள உலகப் பயணம் என பக்கத்துக்குப் பக்கம் வீர சாகசங்கள்தான். மேற்கத்திய இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்பை எளிமையாக சுருக்கித் தந்துள்ளார் நூலாசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments