முகப்பு

ஒரு துணைவேந்தரின் நேற்றும் - இன்றும்

இந்த புத்தகத்தில், டாக்டர் ராஜா வாழ்வில் நடந்த இரண்டு ஆன்மிக சம்பவங்கள் நம்மையும் வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன.

25 நவம்பர் 2026, 7:58 pm
ஒரு துணைவேந்தரின் நேற்றும் - இன்றும்
பகிர்:

ஒரு துணைவேந்தரின் நேற்றும் -இன்றும்: ராணி மைந்தன்; பக். 144; ரூ. 250; வானதி பதிப்பகம், சென்னை-600 017. ✆ 044-2454 2810.

பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ள ராணி மைந்தன், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மேஜர் டி.ராஜாவின் வாழ்க்கையை இந்த நூலில் மிக அழகாக, சுருக்கமாக, சுவாரஸ்யமாக கொடுத்துள்ளார்.

பிரிட்டிஷ் காலத்தில் போலீஸ்காரர் மகனாகப் பிறந்த ராஜா, மிகச் சிறந்த டாக்டராகவும், ராணுவத்தில் சேர்ந்து சேவை புரிந்து, மீண்டும் தமிழகத்துக்கு வந்து அரசு மருத்துவமனைகளில் பல நிலைகளில் பணியாற்றி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஓய்வு பெற்று, தற்போது 88 வயதிலும் சுறுசுறுப்பாக மருத்துவத் தொழிலைத் தொடர்ந்து வருகிறார்.

Advertisement

Advertisement

இந்த புத்தகத்தில், டாக்டர் ராஜா வாழ்வில் நடந்த இரண்டு ஆன்மிக சம்பவங்கள் நம்மையும் வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன.

பெரியார் ஈவெரா சிந்தனைகளில் ஈடுபட்ட டாக்டர் ராஜா ஆன்மிக வழிபாடுகளில் ஈடுபாடு காட்டியதில்லை. காஷ்மீர் வைஷ்ணவதேவி கோயில், அமர்நாத் லிங்கம் ஆகியவற்றின் அருகில் செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது அங்கு தரிசிக்க மறுத்தவர். அப்படிப்பட்டவர் ஒரு முறை காஞ்சி பெரியவரை சந்திக்க வந்த நண்பர்களுடன் வருகிறார். கூட்டத்தில் தொலைவில் இருந்த டாக்டர் டி.ராஜாவை பெரியவர் அழைத்து ஒரு பழம் கொடுத்து 'நீ நன்றாக இருப்பாய்' என்று வாழ்த்தியபோது, அவர் முற்றிலும் மாறிவிட்டார்.

ஒரு முறை ராஜா வீட்டுக்கு வந்த மேல்மருவத்தூர் அம்மா இரண்டு விஷயங்களை சொல்கிறார். 'உன் மகன் வெளிநாடு போவான்; பல் மருத்துவர் பதவி உனக்கு வரும்'. ராஜாவின் மகன் வேலைபார்த்த மருத்துவமனை அவரை மேல்படிப்புக்காக ஜெர்மனிக்கு அனுப்பியது. பல் மருத்துவர் பி.பி. ராஜன் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதால், அந்தப் பதவிக்கு ராஜா தேர்வு செய்யப்பட்டார்.

டாக்டர் ராஜாவுக்கு மட்டுமல்ல, நமக்கும் வியப்பு தருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.