FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சாத்தானின் வேதம் (கபாலா முதல் எப்ஸ்டீன் வரை)

அதிகாரத்தில் இருப்பவர்கள் உலகெங்கும் தங்களுக்கென ஒரு கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க முயல்கிறார்கள் எனக் கூறும் ஆசிரியர், இந்தப் போக்கை நிராகரிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்.

7 செப்டம்பர் 2026, 7:13 pm IST
பகிர்:

சாத்தானின் வேதம் (கபாலா முதல் எப்ஸ்டீன் வரை)-சி. வெற்றிவேல்; பக். 312; ரூ. 499; வானவில் புத்தகாலயம், சென்னை-600 017. ✆ 044- 2986 0070.

எந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னால் இருக்கும் காரணங்களைத் தேடிப் போவதில்லை. ஆனால், நூலாசிரியர் உலக அரசியல், பொருளாதார மாற்றங்களின் பின்னால் என்னென்ன மர்மங்கள் இருக்கின்றன என்பதை ஆராய்ந்திருக்கிறார்.

பண்டை காலம் தொடங்கி நவீன காலம் வரையில் நிகழ்ந்த அரசியல், பொருளாதார மாற்றங்களுக்கு பின்னால் மர்மங்கள் நிறைந்த அதிகார உலகம் செயல்படுவதை நம் கண்முன் கொண்டு வருகிறார்.

Advertisement

Advertisement

எகிப்திய மாந்திரீகப் பள்ளிகளில் தொடங்கி, கானான் தேசத்து பால் வழிபாட்டைக் கடந்து, இன்றைய ஜெப்ரி எப்ஸ்டீன் தீவு வரை தொடரும் ரத்தக் கறை படிந்த மர்மங்கள் சங்கிலியாக வந்து போகின்றன.

யூதர்கள் ஆரம்பத்தில் கடைப்பிடித்த ஒழுக்கம் நிறைந்த வழிபாட்டுமுறை காலப்போக்கில் அவர்கள் பாபிலோனிய மன்னரின் அடிமைகளாக இருந்த போது மாறிவிடுவதையும், மீண்டும் அவர்கள் விடுதலையாகி வரும்போது அவர்களிடத்தில் மற்றொரு வழிபாட்டு முறை உருவாகிவிட்டதையும் நூலாசிரியர் அழகாக காட்டியுள்ளார்.

வரலாற்றில் ஒழுக்கம் நிறைந்த வழிபாட்டு முறைகள் காலப்போக்கில் ஆபாசம், உயிர்ப்பலிகள் நிறைந்த வழிபாட்டு முறைகளாக உருமாற்றம் பெற்றதை அறிய முடிகிறது.

பழங்கால வழிபாட்டு முறைகளில் இருந்த தெய்வங்களின் பெயர்கள் மட்டுமே இன்று மாறியுள்ளன. அன்று கல் சிலைகளுக்கு முன் நடத்தப்பட்ட உயிர்ப்பலிகள் இன்று மூடப்பட்ட அறைகளுக்குள், ரகசிய தீவுகளுக்குள் அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்களால் நடத்தப்படுகிறதோ என்ற சந்தேகத்தை நூலாசிரியர் எழுப்பியுள்ளார்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் உலகெங்கும் தங்களுக்கென ஒரு கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க முயல்கிறார்கள் எனக் கூறும் ஆசிரியர், இந்தப் போக்கை நிராகரிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments