FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நூல் அரங்கம்

மாருதியின் கதை (வணிகம்)

ஒரு 'கார்ப்பரேட் த்ரில்லர்' வாசித்த அனுபவத்தைத் தருகிறது இந்நூல்!

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 3:06 pm IST
பகிர்:

மாருதியின் கதை (வணிகம்)- ஆங்கிலத்தில் ஆர்.சி. பார்கவா- சீதா; தமிழில்: சுப. மீனாட்சி சுந்தரம்; பக். 384; ரூ. 500; அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பொள்ளாச்சி- 642 003. ✆ 99761 44451.

மாருதி கார் நிறுவனத்தின் வெற்றிப் பயணம் குறித்த புத்தகத்தின் தமிழாக்கம் இது. ஒரு நாட்டின் பொருளாதாரம் எப்படி கையாளப்பட்டிருக்கக் கூடாது என்பதின் அடையாளம் 1960-80 காலகட்டமாகும்.

உலகத் தரமான பொருள்களை உற்பத்தி செய்து, சிறந்த சேவையை வழங்கி, லாபகரமாகவும் இயங்குகிற பொதுத் துறை நிறுவனம் என்ற கருத்தே 1980-களில் இந்தியாவில் நகைப்புக்குரியதாக இருந்தது. தரம் குறித்த விழிப்புணர்வு இல்லாத சூழலில் ஜப்பான் தொழில் ஒத்துழைப்புடன் உருவானது மாருதி கார் நிறுவனம்.

Advertisement

Advertisement

'எல்லாம் வல்ல' அன்றைய பிரதமரின் மகன் சஞ்சய் காந்தியின் கனவுத் திட்டமாக மாருதி நிறுவனம் தொடங்கப்பட்டாலும், அது நிறைவேற பல தடைகளை எதிர்கொண்டது. திட்டம் நிறைவேறியே ஆக வேண்டும் என்று அரசு நிர்வாகம் முடுக்கி விடப்பட்டது. அந்தக் கால பொருளாதார, அரசியல், சமூக சிந்தனை, நிர்வாக சட்ட-திட்டங்கள் எவ்வளவு இறுக்கமானதாக இருந்தது என்பதை துல்லியமாகப் படம் பிடிக்கிறது இந்நூல்.

'அன்று ஒருவாறு வெற்றிகரமாகவே இயங்கி வந்த வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, வெளிநாட்டு கூட்டுத் தயாரிப்பை ஊக்குவித்திருந்தாலே, விரைந்தும் ஊழல் பழிக்கு உள்ளாகாமலும் நாட்டுக்குப் புதிய ரக பயணிகள் வாகனம் கிடைத்திருக்கக் கூடும்.'

'அரசுக்கு சொந்தமான நிறுவனமாக இருந்தபோதிலும் அரசு நிறுவனம் போல மாருதி நடத்தப்படக் கூடாது என்று ஒரு புதிய பணிக் கலாசாரம் உருவாக்கப்பட்டது; மாருதி என்னும் அரசு நிறுவனம் தனித்துவமானதுடன், உயர் உற்பத்தித் திறன் கொண்ட பணிக் கலாசாரத்தை உருவாக்கியது' என்பது முதல், பல விஷயங்களை நேர்மையாகப் பதிவு செய்கிறார் மாருதி தலைவர் ஆர்.சி. பார்கவா.

ஒரு 'கார்ப்பரேட் த்ரில்லர்' வாசித்த அனுபவத்தைத் தருகிறது இந்நூல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments