எங்கிருந்து வந்தாள்
கதாபாத்திரங்கள் இயல்பாகப் படைக்கப்பட்டுள்ளதால், வாசகர்களின் மனதில் 'எங்கிருந்து வந்தாள்' நிலைத்து நிற்கும்.
எங்கிருந்து வந்தாள் (குறு நாவல்)-வே. சுகுமாரன்; பக். 30; ரூ. 30; ஆம்பல் பதிப்பகம், சென்னை - 600 008, ✆ 78689 34995.
நல்ல இலக்கியம் என்பது உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். மனித முகங்கள் வேறுபடுவதைப் போலத்தான் நல்ல இலக்கிய முயற்சிகள் வேறுபடுகின்றன.
நாவல் படைப்பிலும் புதிய முயற்சிகள் செய்யப்பட்டு, புதிய முறையில் கதை சொல்லும் பழக்கம் ஏற்பட்டது. அந்த வகையில், வே. சுகுமாரன் எழுதிய 'எங்கிருந்து வந்தாள்' முதல் படைப்பு அமைந்துள்ளது.
Advertisement
Advertisement
ஒரு பெண்ணின் மரணச் செய்தியுடன் கதை தொடங்குகிறது. அது குறித்த நினைவுகள், அதற்கு முன்பு நடைபெற்ற சம்பவங்களை நூலாசிரியர் பின்னோக்கி கூறுவதன் மூலம் கதை நகர்கிறது.
வீட்டு வேலைக்குச் சேர்ந்த பெண், வீட்டின் அனைத்து வேலைகளையும் பொறுப்புடன் செய்து குடும்பத்தினரை அன்புடன் கவனிக்கிறாள்.
அதனால், அந்தக் குடும்பத்தின் நம்பிக்கையையும், முக்கியத்துவத்தையும் பெறுகிறாள். குடும்பத் தலைவர் பார்வையற்றவர். அந்தப் பெண்ணை அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்.
குடும்பத்தின் அனைத்துப் பொறுப்புகளையும் அவள் கவனமாக ஏற்றுக்கொள்கிறாள். இறுதியில், அந்தப் பெண் இறந்துவிடுகிறாள். அவளது மரணத்தால் குடும்பத்தினர் துயரமடைகின்றனர்.
அவளுடைய அருமையையும், இழப்பையும் உணர்கிறார்கள். அந்தப் பெண்ணின் அன்றாட வாழ்க்கை முதல் இறப்பு வரையிலான நிகழ்வுகளை மையமாகக் கொண்டு 'எங்கிருந்து வந்தாள்' குறு நாவல் அமைந்துள்ளது.
சிறு குடும்பப் பின்னணியை மையமாகக் கொண்ட இந்தக் கதை மனித நேயம், அன்பு, சமூகப் பொறுப்பு போன்ற உயர்ந்த பண்புகளை வலியுறுத்துகிறது. கதையின் நிகழ்வுகள் இயல்பாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்கின்றன.
கதாபாத்திரங்கள் இயல்பாகப் படைக்கப்பட்டுள்ளதால், வாசகர்களின் மனதில் 'எங்கிருந்து வந்தாள்' நிலைத்து நிற்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.