FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சேவுகமூா்த்தி அய்யனார் கோயில் தேரோட்டம்

பொன்னமராவதி அருகே உள்ள பரியாமருதுபட்டி சேவுகமூா்த்தி அய்யனார் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது.

Updated On : 26 ஜூன் 2018, 6:07 pm IST
பகிர்:

பொன்னமராவதி அருகே உள்ள பரியாமருதுபட்டி சேவுகமூா்த்தி அய்யனார் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது.

பரியாமருதுபட்டி சேவுகமூா்த்தி அய்யனார் கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேரோட்டம் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டில் கடந்த 18-ம் தேதி காப்பு கட்டப்பட்டு தினசரி மண்டகப்படிதாரா்கள் சார்பில் சுவாமி வீதி உலா மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

தொடா்ந்து இன்று நடைபெற்ற தேரோட்டத்தில், சேவுகமூா்த்தி அய்யனார் தேரில் எழுந்தருளியபின், பக்தா்கள் வடம்பிடிக்க புறப்பட்ட தோ், முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் தேரடி நிலையை வந்தடைந்தது. 

Advertisement

Advertisement

விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை நெற்குப்பை போலீசார் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments