நாக்கை அறுத்து துர்க்கை அம்மனுக்குக் காணிக்கை கொடுத்த பெண் பக்தை
மத்தியப் பிரதேசத்தில் துர்க்கை அம்மனின் பக்தை ஒருவர், தனது நாக்கை அறுத்து அம்மனுக்குக் காணிக்கை செய்த சம்பவம்...
மத்தியப் பிரதேசத்தில் துர்க்கை அம்மனின் பக்தை ஒருவர், தனது நாக்கை அறுத்து அம்மனுக்குக் காணிக்கை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம், மொரெனா மாவட்டத்தைச் சேர்ந்த குட்டி தோமர் என்பவர் துர்கை அம்மனின் தீவிர பக்தை ஆவார். இவர் தர்சமா கிராமத்தில் உள்ள பிஜாசென் மாதா கோயிலுக்கு அடிக்கடி சென்று வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று துர்கை அம்மனை வழிபட கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது, திடீரென தான் கொண்டுவந்த கத்தியை எடுத்து தனது நாக்கை அறுத்து, அம்மனுக்கு காணிக்கை அளித்துள்ளார். குட்டி தோமர் நாக்கை அறுத்ததைக் கண்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
Advertisement
Advertisement
மயக்கமடைந்த அவரை மீட்டு, அங்கிருந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்து வந்தனர்.
அதன்பின்பு, போலீசார் தோமரின் கணவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் 45 வயதாகும் என் மனைவி துர்கை அம்மனின் தீவிர பக்தை. திருமணத்திற்கு முன்பிலிருந்து இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடும் பழக்கம் உள்ளவர். எங்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அவர் திடீரென இப்படிச் செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று அவர் கூறினார்.
இந்த சம்பவம் முதல் முறையாக நிகழ்வது இல்லை. கடவுள் மீதுள்ள தீவிர பக்தியினால் சொந்த உடல் உறுப்புகளை தானம் செய்ய பக்தர்கள் தயாராகிவிட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.