பம்மல் ஸ்ரீ ஐயப்பனுக்கு கோடி அர்ச்சனை விழா
உலக நன்மையை முன்னிட்டு சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பம்மல் ஸ்ரீ தர்மசாஸ்தா குருவாயூரப்பன்..
உலக நன்மையை முன்னிட்டு சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பம்மல் ஸ்ரீ தர்மசாஸ்தா குருவாயூரப்பன் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்பனுக்கு கோடி அர்ச்சனை விழா நவம்பர் 24 தொடங்கி டிசம்பர் 9 வரை நடைபெறுகின்றது.
மேற்படி தினங்களில் அதிகாலை மகா கணபதி ஹோமத்துடன் கோடி அர்ச்சனை ஆரம்பமாகின்றது. ஏழுநாட்களுக்கு சப்த மிருத்யுஞ்சஜய ஹோமமும், கோடி அர்ச்சனை முடிவில் தன்வந்திரி ஹோமமும், மகாலட்சுமி ஹோமமும், பகவதி சேவை, சுதர்ஸன ஹோமம், 108 சுமங்கலி பூஜையும், குருசாமிகளுக்குக் குருபூஜையும் நடைபெற உள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவிக்கின்றது.
ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள் தாந்த்ரீக முறையில் ஷடாதார பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ ஐயப்பனை தரிசிப்பதோடு சிறப்பு ஹோமங்கள், கோடி அர்ச்சனையில் பங்கேற்குமாறு ஸ்ரீ தர்மசாஸ்தா சேவா சங்கம் டிரஸ்ட் நிறுவனர் ப,கிருஷ்ணன் கேட்டுக்கொள்கின்றோம்.
Advertisement
Advertisement
ஹோமகட்டணம் மற்றும் இதர தகவல்களுக்கு - 6444444238/ 9444486217
- தகவல் எஸ்.வெங்கட்ராமன்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.