திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் டிச.12-ல் கும்பாபிஷேகம்: ஏற்பாடுகள் தீவிரம்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் மகா கும்பாபிஷேகம் 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் மகா கும்பாபிஷேகம் 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
கடைசியாக கடந்த 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தின் முயற்றியால் வருகிற டிசம்பர் மாதம் 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது.
9-ம் தேதி பரிவார மர்த்திகளுக்கும், 12-ம் தேதி அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரருக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி பரிவார மூர்த்தி சன்னதிகளில் ஏற்கனவே பாலாலயம் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் வருகிற 7-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக யாக குண்டங்கள் பந்தல் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. முன்னதாக 6-ம் தேதி காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் காவிரி படித்துறையில் இருந்து புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
யாகசாலை பூஜைகள் நடைபெறும் நாட்களில் தினமும் கோயில் வளாகத்தில் இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.