அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
அத்திவரதர் தரிசனத்தை 48 நாளுக்கு மேல் நீட்டிக்க உத்தரவிட முடியாது என உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தகவல் தெரிவித்துள்ளது.
அத்திவரதர் தரிசனத்தை 48 நாளுக்கு மேல் நீட்டிக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தகவல் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் குளத்திலிருந்து எழுந்தருளியுள்ள அத்திவரதர் தரிசனம் ஆகஸ்ட் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், அத்திவரதர் தரிசனத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி சர்வதேச ஸ்ரீ வைஷ்ணவ ராமானுஜ சாம்ராஜ்ய சபா தலைவரான சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர் மனுத் தாக்கல் செய்தார்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோது அத்திவரதர் தரிசனத்தை 10 நாட்கள் நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் பரிசீலித்து வருவதாக மனுதாரர் தரப்பில் சில ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது அரசு தரப்பில் தரிசனத்தை நீட்டிக்கப் போவதில்லை என தமிழக முதல்வர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கோயில் விவகாரம் தொடர்பாக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் தான் முடிவெடுக்க முடியும் என்று நீதிபதி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.