2026-27 நிதியாண்டில் வாராக் கடன்களை மீட்டெடுக்க இந்தியன் வங்கி இலக்கு!
இந்தியன் வங்கி, நடப்பு நிதியாண்டில் வாராக் கடன்களை மீட்டெடுப்பதன் மூலம் ரூ. 5,500 கோடி வரை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
புதுதில்லி: பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி, நடப்பு நிதியாண்டில் வாராக் கடன்களை மீட்டெடுப்பதன் மூலம் ரூ. 5,500 கோடி வரை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
முதல் காலாண்டில் ரூ. 1,885 கோடி மீட்டெடுக்கப்பட்ட நிலையில், 2026-27 நிதியாண்டில் ரூ. 4,500 கோடி முதல் ரூ. 5,500 கோடி வரை திரட்டத் திட்டமிட்டுள்ளதாக இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பினோத் குமார் தெரிவித்தார்.
இதில், தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் முன் விசாரணையில் உள்ள வழக்குகளிலிருந்து, நடப்பு நிதியாண்டில் ரூ. 500 கோடியை மீட்டெடுக்கச் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்தியன் வங்கி நம்பிக்கை தெரிவித்தது.
Advertisement
Advertisement
கடந்த மாதம் தொடங்கப்பட்ட அந்நியச் செலாவணி வைப்புத்தொகை திரட்டும் முயற்சி குறித்துக் கேட்டபோது, ஜூலை 9ஆம் தேதி வரை வங்கி 140 மில்லியன் அமெரிக்க டாலரை திரட்டியுள்ளது என்றார்.
வங்கியின் வைப்புத்தொகை திரட்டும் முயற்சிகள் குறித்துப் பேசிய பினோத் குமார், முதல் காலாண்டில் நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு வைப்புத்தொகையில் 15.3 சதவீத வலுவான வளர்ச்சியை வங்கி பதிவு செய்ததாகத் தெரிவித்தார்.
ஜூன் 2025 இறுதியில் ரூ. 2,77,116 கோடியாக இருந்த இந்த வைப்புத்தொகை, முதல் காலாண்டின் இறுதியில் ரூ. 3,19,525 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Indian Bank is targeting up to Rs 5,500 crore from the recovery of bad loans.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.