சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்
பெரம்பலூர் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் வைகாசி மாத தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது.
பெரம்பலூர் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் வைகாசி மாத தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது.
விழாவையொட்டி, கடந்த 7-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், மே 14-ஆம் தேதி இரவு 12 மணியளவில் பெரியசாமி மலையில் செல்லியம்மனுக்கும், அதிகாலை 4 மணியளவில் மதுரகாளியம்மனுக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும், நாள்தோறும் இரவு அன்ன வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் பரிவார தெய்வங்களுடன் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. சிறுவாச்சூரில் உள்ள பிரதான வீதிகள் வழியே இழுத்துச்செல்லப்படும் திருத்தேர் மீண்டும் இன்று மாலை நிலைக்கு வந்தடைகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.