இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்!
சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம்..
சாத்தூர் அருகே பிரசித்திபெற்ற 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
இந்த சங்காபிஷேகத்தை முன்னிட்டு காலை முதல் மாரியம்மன் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றன. மேலும் 1008 சங்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு யாக பூஜைகளும் நடைபெறுகின்றன.
Advertisement
Advertisement
கோயில் செயல் அலுவலர் இளங்கோவன், பரம்பரை அறங்காவலர்கள் குழுத்தலைவர் இராமமூர்த்திபூசாரி உள்ளிட்ட சாத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.