முகப்பு
செய்திகள்

தஞ்சை திரௌபதி அம்மன் கோயிலில் காளி வீதியுலா!

காளியம்மனை வீடுகள் தோறும் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

Updated On : 29 ஜூலை 2024, 4:01 pm IST
தஞ்சை திரௌபதி அம்மன்
பகிர்:

தஞ்சையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய காளி வீதி உலா. வீதிகளில் ஆடி வந்த காளியைப் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சையை அடுத்த கரந்தையில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தீமிதி திருவிழா நடைபெறும். அதைப்போல் இந்த ஆண்டு கடந்த 8ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

விழாவினை‌ முன்னிட்டு தினமும் மகாபாரத சொற்பொழிவுகள் நடைபெற்று வந்தது. தொடர்ந்து காளி படுகளம் நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது.

Advertisement

Advertisement

அதனைதொடர்ந்து இன்று காளி வீதி உலா நடைபெற்றது. பல்வேறு முக்கிய வீதிகளில் உலா வந்த காளியம்மனை வீடுகள் தோறும் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர். தொடர்ந்து காளியாட்டம் நடைபெற்றது இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments