முகப்பு
செய்திகள்

வரம் தரும் வாரம்!

இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...

Updated On : 27 செப்டம்பர், 2024 at 12:31 PM
வார பலன்கள்
பகிர்:
Updated On : 27 செப்டம்பர், 2024 at 12:24 PM

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஆகஸ்ட் 6 - 12) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 12:24 PM

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தொழிலில் ஏற்றம் உண்டாகும். பொருளாதாரம் சிறக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மழலைப் பாக்கியம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வியாபாரிகளுக்கு விற்பனையில் வளர்ச்சி உண்டாகும். விவசாயிகள் மாற்றுப்பயிர்களைப் பயிரிடுவீர்கள்.

Advertisement

அரசியல்வாதிகளின் செயல்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். கலைத் துறையினரின் எதிர்பார்ப்பு நிறைவேறும். பெண்கள் புதிய ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்களுக்குப் படிப்பில் முன்னேற்றம் உண்டு.

சந்திராஷ்டமம் - இல்லை.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 12:24 PM

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

உற்சாக மனநிலையுடன் வலம் வருவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் உங்களைத் தேடி வரும். தொழிலுக்காகப் பயணங்கள் செய்ய நேரிடும். இல்லத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.

உத்தியோகஸ்தர்கள் வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் உண்டாகும். விவசாயிகளுக்கு நீர்ப்பாசனத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் உண்டாகும். கலைத் துறையினர் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெண்கள் குடும்பத்தில் பிரிந்து சென்றவர்களைச் சந்திப்பீர்கள்.

மாணவர்களுக்கு மனக் குழப்பங்கள் நீங்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 12:24 PM

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உடல் உபாதைகள் நீங்கும். குடும்பத்தில் மனக் கசப்புகள் நீங்கும். சேவையில் ஈடுபாடு உண்டாகும். வருமானம் படிப்படியாக உயரும்.

உத்தியோகஸ்தர்களின் பேச்சை கேட்டு பிறர் நடப்பார்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் தைரியமாக ஈடுபடுவீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் கூடும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் புதிய பதவிகள் கிடைக்கும். கலைத்துறையினர் பிறருடன் இணக்கமாக இருப்பீர்கள். பெண்கள் குடும்பத்தில் அபிவிருத்தியைக் காண்பீர்கள்.

மாணவர்கள் ஆன்மிகத்திலும் தர்மக் காரியங்களிலும் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 12:26 PM

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

வருமானம் சிறப்பாக இருக்கும். புதிய சேமிப்புகளில் சேர்வீர்கள். புதிய சொத்துகளை வாங்குவீர்கள். பெயரும் அந்தஸ்தும் உயரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு போனஸ் கிடைக்கும். வியாபாரிகள் உறுதியான முடிவுகளை எடுப்பீர்கள். விவசாயிகள் விளைச்சலில் முழு கவனத்தைச் செலுத்துவீர்கள்.

அரசியல்வாதிகளின் எண்ணங்கள் ஈடேறும். கலைத் துறையினர் புதிய கலைகளைக் கற்பீர்கள். பெண்கள் கணவரின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பீர்கள்.

மாணவர்கள் வருங்காலத்துக்கான சிறப்பாக அடித்தளத்தை மேற்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 12:26 PM

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தினரின் ஆதரவும் நட்பும் கூடும். தொழிலில் புதிய சாதனைகளைச் செய்வீர்கள். இனிமையாகப் பேசிய பிறரை கவர்வீர்கள். கடன்கள் வசூலாகும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விவசாயிகள் யோசித்து செயல்படுவீர்கள்.

அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கலைத் துறையினர் பிறருக்கு நுட்பங்களைப் பயிற்றுவிப்பீர்கள். பெண்கள் உற்சாகத்துடன் இருப்பீர்கள்.

மாணவர்கள் ஆசிரியர் சொல் கேட்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 12:26 PM

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரம் மேன்மையாக இருக்கும். உறவினர்களுக்கு உதவுவீர்கள். பூர்விக சொத்துகள் கிடைக்கும். அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் தகுந்த ஊதியத்தைப் பெறுவீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் தேடி வரும்.

அரசியல்வாதிகள் மக்கள் நலத் தொண்டுகளில் அக்கறை காட்டுவீர்கள். கலைத் துறையினருக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். பெண்கள் புதிய ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள்.

மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 12:26 PM

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

சிந்தித்துச் செயல்படுவீர்கள். கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அரசு சலுகைகள் கிடைக்கும். எதிர்ப்புகள் இருக்காது. பொருளாதாரம் சிறக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அந்தஸ்து உயரும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். விவசாயிகளுக்கு வங்கிக் கடன் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். கலைத் துறையினர் சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். பெண்கள் குடும்பத்தைச் சிறப்பாக நிர்வகிப்பீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் தனி முத்திரையைப் பதிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 12:26 PM

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பொருளாதாரம் மேம்படும். இல்லத்துக்கு நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கலில் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் கருப்பு நிறப் பயிர்களில் லாபம் அடைவீர்கள்.

அரசியல்வாதிகள் கொள்கைகளில் பிடிப்பாக இருப்பீர்கள். கலைத் துறையினர் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள்.

பெண்கள் புனித திருத்தலங்களுக்குச் செல்வீர்கள். மாணவர்கள் சக மாணவர்களுடன் சுமுகமாகப் பழகுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 12:26 PM

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

எடுத்த காரியங்களை முடிப்பீர்கள். மருத்துவச் செலவுகள் கூடும். முக்கிய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செயல்களில் பழைய அனுபவம் கைகூடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய பொருள்களை வாங்கி விற்பீர்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகள் மனம் திறந்துப் பேச வேண்டாம். கலைத் துறையினர் துறையில் தேக்கநிலையை மாறக் காண்பீர்கள். பெண்கள் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள் புதிய படிப்பு

களில் சேர்வீர்கள்.

சந்திராஷ்டமம் - செப்டம்பர் 27, 28.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 12:26 PM

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

திட்டமிட்டு காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கடினமாக உழைப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறக்கும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் வழக்குகளில் சாதகமான சூழலைக் காண்பீர்கள். வியாபாரிகள் தணித்துச் செய்யும் காரிங்களில் பயனடைவீர்கள். விவசாயிகள் பயிர்களைப் பாதுகாப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.

பெண்கள் மனத்தெளிவுடன் இருப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - செப்.29, 30, அக். 1.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 12:26 PM

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

தொழிலில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உடனிருப்போர் உதவியாய் இருப்பீர்கள். குழப்பான விஷயங்களிலும் சரியான முடிவை எடுப்பீர்கள். புரியாத புதிர்களுக்கு விடை கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் கிடைக்கும். விவசாயிகள் புதிய குத்தகை முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும். கலைத் துறையினருக்கு வெற்றிகள் கிடைக்கும். பெண்கள் ஆன்மிகத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - அக். 2, 3.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 12:26 PM

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

நேர்மறை சிந்தனைகளால் வெற்றி பெறுவீர்கள். கவனம் சிதறாமல் காரியமாற்றுவீர்கள். புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். கடன் அடைப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைக் கருத்துடன் செய்வீர்கள். வியாபாரிகள் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

பெண்கள் குழந்தைகளின் வளர்ச்சியில் ஈடுபாடு காட்டுவீர்கள். மாணவர்கள் பெற்றோர் சொல் கேட்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.