முகப்பு
செய்திகள்

தஞ்சைப் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!

தஞ்சைப் பெரிய கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 23 ஏப்ரல் 2025, 12:17 pm IST
சித்திரைத் திருவிழா
பகிர்:

உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோவிலில் ஆண்டுதோறும் 18 நாள்கள் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டு சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு பிரம்மாண்ட கொடி மரம் அருகே விநாயகர் மற்றும் அம்பாளுடன் சந்திரசேகர் எழுந்தருளி கொடிமரத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

அதனைத் தொடர்ந்து பக்தர்கள் வழங்கிய துணிகளை கொண்டு நந்தி பெருமான் வரையப்பட்ட பிரம்மாண்ட கொடிமரத்தில் சிவ கனங்கள் இசைக்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

18 நாள்கள் நடைபெறும் விழாவினை முன்னிட்டு தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற மே 7ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments