ஜகன்நாத பரமேஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா: திரளானோர் பங்கேற்பு!
ஜகன்நாத பரமேஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கோபுர தரிசனம் செய்தது பற்றி..
தஞ்சாவூரில் அபிராமி உடனுறை ஜகன்நாத பரமேஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கோபுர தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அன்னுக்குடி கிராமத்தில் அபிராமி உடனுறை ஜகன்நாத பரமேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோயில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
பணிகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இன்று காலை நான்காம் கால பூஜைகள் நிறைவு பெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வான வேடிக்கையுடன் கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.