சிதம்பரம் நடராஜருக்கு தங்க அபயஹஸ்தம்: பக்தர் காணிக்கை!
சிதம்பரம் நடராஜர் கோயில் உற்சவ மூர்த்தியான சோமாஸ்கந்தருக்குத் தங்க அபயஹஸ்தம் அணிவிக்கப்பட்டது பற்றி..
சிதம்பரம் நடராஜர் கோயில் உற்சவ மூர்த்தியான சோமாஸ்கந்தருக்குத் தங்க அபயஹஸ்தம் அணிவிக்கப்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஸ்ரீ நடராஜ மூர்த்தியின் ப்ரிதிநிதியாக விளங்கும் உற்சவ மூர்த்தியான ஸ்ரீசிவானந்தநாயகி ஸமேத ஸ்ரீ சோமாஸ்கந்தருக்கு ஆனித் திருமஞ்சன தரிசன மஹோதஸவ தினமான 3-ஆம் நாளான திங்கள்கிழமை மாலை பக்தர் ஒருவரால் அவரது கட்டளை தீட்சிதர் ஆர். பாஸ்கர் தீட்சிதர் மூலம் கோயில் பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் ஜெயசூர்யா தீட்சிதரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பக்தர் ஒருவரால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பவழம், புஷ்பராகம், பச்சைக் கற்கள் பதித்த தங்க அபயஹஸ்தம் கவசம் திங்கள்கிழமை மாலை சோமாஸ்கந்தருக்கு அணிவிக்கப்பட்டது. இதன் மொத்த எடை சுமார் 195 கிராம். இதன் மதிப்பு ரூ. 30 லட்சமாகும்.
Advertisement
Advertisement
A golden Abhaya Hasta (gesture of reassurance) was adorned on Somaskanda, the processional deity of the Chidambaram Natarajar Temple.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.