நெல்லையப்பர் கற்பக விருட்ச வாகனத்தில் வீதியுலா!
நெல்லையப்பர் திருக்கோயில் ஆணி பெருவிழாவில் கற்பக விருட்ச வாகனத்தி சுவாமி திருவீதியுலா வந்தது பற்றி..
நெல்லையப்பர் திருக்கோயில் ஆணி பெருவிழா இரண்டாம் நாளில் சுவாமி நெல்லையப்பர் கற்பக விருட்ச வாகனத்திலும், காந்திமதியம்பாள் கமல வாகனத்திலும் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோயில் ஆணி பெருந்திருவிழா கடந்த 20 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று காலை சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி நெல்லையப்பரும் கமல வாகனத்தில் காந்திமதி அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்திருந்தனர்.
தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சுவாடச உபசார மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், யாகசாலை பூஜையும் குடவரை வாயில் தீபாராதனையும் நடைபெற்று சுவாமி அம்பாள் திருவீதி உலா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
Advertisement
Lord Nellaiyappar goes on a street procession atop the 'Kalpaka Vriksha' (wish-fulfilling tree) vehicle!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.