தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்திஸ்வரர் கோயில் தேரோட்டம்!
கண்டதேவி சொர்ணமூர்த்திஸ்வரர் கோயில் தேரோட்டம் தொடர்பாக...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டம், ஞாயிற்றுக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.
இந்தக் கோயிலில் தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி ஆகிய 4 பகுதிகளைச்சேர்ந்த 170-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனித் திருவிழா தேரோட்டம் விமர்சையாக நடைபெறும். தேர் வடம் பிடித்து இழுப்பதில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்னையால், கடந்த 1998-ம் ஆண்டு தேரோட்டம் நின்றது.
Advertisement
Advertisement
பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடந்த 2002 முதல் 2006 வரை தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து கும்பாபிஷேகம், தேர் பழுது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. உயர் நீதிமன்ற உத்தரவிட்டதையடுத்து, 17 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2024 -ம் ஆண்டு தேரோட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது.
நடப்பாண்டில் கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆனித் திருவிழா ஜூன் 20-ம் தேதி கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. 9-ஆம் நாளான இன்று (ஜூன் 28) முக்கிய நிகழ்வான தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை சுவாமி, அம்மன் தேரில் எழுந்தருளினர். காலை 7.45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. அனைத்து சமூகத்தினரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். காலை 8.42 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. பாதுகாப்பு பணியில் இரண்டாயிரம் போலீஸார் ஈடுபட்டனர்.
The chariot procession of the Kandadevi Swarnamoortheeswarar Temple, near Devakottai in Sivaganga district, was held with great grandeur on Sunday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.