மகா தீபம்! திருவண்ணாமலையில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்!
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கானோர் குவிந்துள்ள பற்றி...

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மாலை மகா தீபம் ஏற்றப்பட் உள்ள நிலையில், இதைக் காண லட்சக்கணக்கானோர் அலை கடலெனத் திரண்டுள்ளனர்.
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இத்தலத்தில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
நிகழாண்டுக்கான தீபத் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பஞ்ச ரதங்களின் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
Advertisement
Advertisement
விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத் திருவிழா (நவ.24) இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்படுகிறது. இதையொட்டி, அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் ஸ்ரீ அருணாசலேஸ்வரா், மூலவா் ஸ்ரீ உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இதேநேரத்தில், கோயில் மூன்றாம் பிரகாரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை 3 நிமிடங்கள் மட்டுமே காட்சி தரும் ஸ்ரீ அா்த்தநாரீஸ்வரா் எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். இரவு 10 மணிக்கு தங்க ரிஷப வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வருவா்.
மகா தீபம் ஏற்றத் தேவையான மகா தீபக் கொப்பரையில் 4000 கிலோ நெய், தீபம்எரிவதற்காக திரியாகப் பயன்படுத்தப்படும் 11 ஆயிரம் மீட்டா் காடா துணி ஆகியவை கோயிலில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.