முகப்பு

காஞ்சிபுரம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் திருக்குட நன்னீராட்டு! கணபதி ஹோமத்துடன் தொடங்கியது!

காஞ்சிபுரம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா பற்றி..

காஞ்சிபுரம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் திருக்குட நன்னீராட்டு! கணபதி ஹோமத்துடன் தொடங்கியது!
பகிர்:

காஞ்சிபுரம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா துவக்க நிகழ்வாக கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது

தொண்டை நாட்டின் தலைநகரமாக விளங்கிய காஞ்சிபுரம் மாநகரத்தில், நடுநாயகமாக அமர்ந்து வீற்றிருக்கும் ஸ்ரீ குமரகோட்ட முருகப்பெருமான் கட்சியப்ப சிவாச்சாரியாருக்கு விகட சக்கரம் என்று முதல் அடி எடுத்துக் கொடுத்து கந்தபுராணத்தை அரங்கேற்றிய தலமாகும்.

இத்திருத்தலத்தில் பல லட்சம் மதிப்பீட்டில் கும்பாபிஷேக விழா பணிகள் தொடர்ந்து நடைபெற்று தற்போது இறுதி அடைந்ததைத் தொடர்ந்து இன்று காலை 9 மணி முதல் கணபதி ஓமத்துடன் திருக்குட நன்னீராட்டு பெருவிழா தொடங்கியது.

Advertisement

Advertisement

திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ விநாயகருக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் தற்போது கணபதி ஓம நிகழ்வினை நடத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து கோ பூஜை நடைபெற உள்ளது.

மேலும், திருக்கோயில் உற்சவர் வலம் வர வெள்ளி மயில் வாகனம் புதியதாக உபயதார் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் அளித்துள்ள மயில் வாகனம் சிறப்புப் பூஜைகளுக்குப் பின் தற்போது கரிக்கோல் எனப்படும் நிகழ்வில் ராஜவீதிகளை வலம் வந்து திருக்கோயிலை அடைந்தது.

தொடர்ந்து வியாழன் வெள்ளி சனிக்கிழமை ஆகிய மூன்று நாள்களும் ஐந்து கால பூஜைகள் நடைபெற உள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணிக்கு ஆறாம் கால பூஜை தொடங்கி காலை 5 மணி அளவில் ராஜகோபுரங்கள் மற்றும் விமானங்களுக்குத் திருக்குட நன்னீராட்டும் அதைத் தொடர்ந்து மூலவர் சன்னதியின் அமர்ந்துள்ள மூலவருக்குத் திருக்குட நன்னீராட்டு நடைபெற்று மகா சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம் இரவு எட்டு மணிக்கு புதிய வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடும் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.