FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முத்து கொளக்கியம்மன் கோயிலில் அக். 25ல் புதிய திருத்தேர் வெள்ளோட்டம்!

முத்து கொளக்கியம்மன் கோயிலில் புதிய திருத்தேர் வெள்ளோட்டம் பற்றி..

35 வினாடிகள் முன்பு
கொளக்கியம்மன் கோயில் - video crop
பகிர்:

காஞ்சிபுரம் அடுத்த புத்தகரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்து கொளக்கி அம்மன் திருக்கோயில் புதிய திருத்தேர் வெள்ளோட்டம் வருகிற அக்டோபர் 25 நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் புத்தகரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது அருள்மிகு முத்து கொளக்கியம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலுக்குக் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு புதிய திருத்தேர் செய்யும் பணி துவங்கி நிறைவு பெற்றது. இந்நிலையில் தேர் வெள்ளோட்டம் தலித் பகுதிகளுக்கு வர வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. இதற்கு மற்றொரு தரப்பினர் கோயில் நடைமுறைபடியே தேர் வெள்ளோட்டம் விடப்பட வேண்டும் எனக் கூறப்பட்ட நிலையில் திருத்தேர் தலித் பகுதிகளுக்கு விட வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாசறை செல்வராஜ் என்று வழக்கு தொடர்ந்தார்.

அதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தடை ஏதும் இல்லாமல் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும் எனக் கூறி அதற்கான அறிவுரைகளையும் வழங்கியது. இந்நிலையில் இந்த நிகழ்வு தாமதமாவதாகக் கூறி பாசறை செல்வராஜ் இன்று முதல் சாகும் வரை உண்ணாவிரதம் வாலாஜாபாத் அம்பேத்கர் சிலை முன்பு ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

இந்நிலையில், நேற்று தமிழக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் இவரிடம் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறும் தேதி இன்று அறிவிக்கப்படும் என அறிவித்ததின் அடிப்படையில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் சார்பு அமைப்புகள் சேர்ந்து சென்றபோது சார் ஆட்சியர் முறையாகப் பதில் அளிக்காததால் திடீரென 50க்கும் மேற்பட்டோர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்ற பின் வருகிற அக்டோபர் 25ஆம் தேதி திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெறும் என எழுத்துப் பூர்வமாக அளிக்கப்பட்டது.

ஓராண்டாக இந்த பிரச்னை நீடித்து வந்த நிலையில் தேர் வெள்ளோட்டம் வருகிற 25-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது தலித் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments