முகப்பு
கவிதைமணி

என்ன தவம் செய்தேன்: - பி.பிரசாத்

Updated On : 20 ஆகஸ்ட் 2017, 6:16 pm IST
பகிர்:
காணும் திசையெல்லாம்   கருத்தரிப்பு மையங்கள் !நானும் பார்க்கின்றேன் !   நாள்தோறும் கூட்டங்கள் !போதும் 'பெண்'ணென்று   பிறந்தசில மணியிலே...ஏதும் நினைக்காமல்   எறிகின்றார் மறுபுறத்தில் !தேவன் அருளாலே   நானில்லை இருபுறமும்...ஜீவன் என்ஜீவன்  நீவந்தாய் எனக்கென்று !வாழும் என்வாழ்வில்  வளம்சேர்க்க வந்தாயே !யாழின் இசைதாண்டி   இனிக்கின்ற கண்மணியே !யானும் என்செய்தேன்..  தவமென்று அறியேனே !ஊனும் உயிரிதுவும்   உனக்கென்றே வாழ்வேனே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments