FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு!

நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்த்தப்படுவது பற்றி...

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 10:51 am IST
முதல்வர் ஜோசப் விஜய் - TN Assembly
பகிர்:

தமிழ்நாட்டில் நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையாக உயர்த்தப்படுவதாக முதல்வர் ஜோசப் விஜய் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியவுடன், மாநிலத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாட வேண்டும் என்ற தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் பேசிய முதல்வர் ஜோசப் விஜய், நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.

Advertisement

Advertisement

அவர் பேசியதாவது:

“விவசாயிகள் நெல் மற்றும் கரும்புகளை பயிரிடுவதிலும், விற்பனை செய்வதலும் தங்களின் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் செலவிட்டு மேற்கொள்கின்றனர்.

தற்போது தமிழ்நாட்டின் நிதிநிலை சரியாக இல்லாத போதிலும், நெல் மற்றும் கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்பதால் மாநில அரசு சார்பில் நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.

சன்ன ரக நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 289 உயர்த்தி ரூ. 2750-ம், பொது ரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 159 உயர்த்தி ரூ. 2600-ம் வழங்கப்படும். மாநில அரசின் ஊக்கத்தொகையானது ஒரு ஆண்டில் ரூ. 156-க்கு மேல் உயர்த்தி வழங்குவது இதுவே முதல்முறையாகும்.

அதேபோல், 2025-26 கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ. 3,290.50 நிர்ணயம் செய்துள்ளது. அதனுடன் சிறப்பு ஊக்கத்தொகையாக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 709.50 வழங்கப்படும். இத்துடம் மொத்தமாக விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4,000 வழங்கப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு கரும்பு ஒரு டன்னுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ. 156 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. மாநில அரசால் கரும்பு சிறப்பு ஊக்கத்தொகையாக ஒரு ஆண்டில் ரூ. 130-க்கும் மேல் வழங்குவது இதுவே முதல்முறை” எனத் தெரிவித்தார்.

summary

Incentive hike for paddy and sugarcane farmers! Chief Minister Vijay announces!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments