தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு...
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாகவே பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. மக்களும் பல்வேறு பகுதிகளில் வீதிகளில் இறங்கி, மின்வெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மின்வெட்டு தொடர்பான புகார்களும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்ட பலரும் பல்வேறு காரணங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் விஜய் இன்று காலை திடீரென சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
Advertisement
Advertisement
மின் உற்பத்தி, மின் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு அலுவலங்களில் விஜய் ஆய்வு செய்து வருகிறார். அதேபோல மின் நுகர்வோர் குறை தீர்க்கும் மையமான மின்னகத்திலும் ஆய்வு செய்கிறார்.
தமிழ்நாட்டில் மின் உற்பத்தி மற்றும் தற்போதைய மின் தேவை தொடர்பாக அதிகரிகளிடம் கேட்டறிந்து வருகிறார்.
Frequent Power Outages: CM Vijay Conducts Surprise Inspection at Electricity Board Office
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.