மனத்திற்கிட்ட கட்டளை: பி.பிரசாத்
அவசரம் ! அவசரம் ! எல்லாம் அவசரம் !
நவயுக வாழ்வில்...நாமோர் எந்திரம் !
காலையில் அவசரம் ! மாலையில் அவசரம் !
சாலையில் அவசரம் ! வேலையில் அவசரம் !
ஆம்புலன்ஸ் போலே...அவசரம் காட்டி...
ஆம்புலன்ஸ் ஏறி...போவதே நிலவரம் !
Advertisement
Advertisement
அவசரம் அதனால் அல்லலே மனமே !
கவனமும் சிதற..கவலைகள் வருமே !
பொறுமை எனுமோர்...பக்குவ குணமே !
அருமைப் பொருள்கள்...அனைத்தும் தருமே !
பொறுமை காப்பாய்...கேட்டிடு மனமே !
பெருமைகள் பலவாய்,,நிச்சயம் வருமே !