FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கவிதைமணி

நிழல் தேடி:  கவிஞர் இரா .இரவி

Updated On : 20 மார்ச் 2017, 4:44 pm IST
பகிர்:

விழிகளை  விற்று  ஓவியம் வாங்கிய கதையாக
விறகிற்காக மரங்களை வெட்டி நிழல் தேடுகின்றனர் !

மரம் பூ   காய் கனி  நிழல் மட்டும் தரவில்லை
மானுடர் சுவாசிக்க நல்ல காற்றும் தருகின்றது !

மரம் என்பது மழைக்கான வரவேற்பு 
மனிதர்கள் புரிந்து மரம் வளர்ப்பது சிறப்பு !

Advertisement

Advertisement

வார்தா புயல் சென்னைக்கு நிழல்  தந்த மரங்களை
வேரோடு  வீழ்த்தி மகிழ்ந்து சென்றது !

வீழ்ந்த  மரங்களின் எண்ணிக்கையில் பன்மடங்கு 
விரைவாக புதிய மரங்கள் நட வேண்டும் !

விளம்பரத்திற்காக மரங்கள் நட்டால் போதாது 
வளரும் வரை தொடர்ந்து  நீர் ஊற்ற வேண்டும்  !

சாலைக்காக ஆலைக்காக என்று கண்டபடி 
சாய்க்கின்றனர் அற்புத மரங்களை !

ஒரு மரம் வெட்டப்பட்டால் ஈடாக 
உடன் பத்து மரங்கள் நடவேண்டும் !

நீதி மன்றங்கள் பதில் மரம் நடவேண்டுமென 
நியாயத் தீர்ப்புத்  தந்தாலும் மதிப்பதில்லை !

மரம் வளர்ப்பு என்பது அறம் வளர்ப்பு 
மானிடர்கள் புரிந்து கொள்ள வேண்டும் !

காடுகளை அழித்து வீடுகள் கட்டுவதை 
கட்டாயம் உடன் நிறுத்திட வேண்டும் ! 

தனியார் அரசாங்கம் யாராக இருந்தாலும் 
தனி ஒரு மரம் வெட்டும் முன்  பத்து மரம் நடுங்கள் !

மரம் வெட்டுதலை கொலைக்  குற்றமாக்கி 
மரம் வெட்டுவோருக்குத் தண்டனை தர வேண்டும் !  

பச்சையம் காக்க  பசுமை காக்க நமது 
பூமியில் மரங்களைக் காத்திட வேண்டும் !

மரங்களை அழிக்க அழிக்க இயற்கை
மனிதனை அழிக்கும்  என்பதை உணருங்கள் ! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments